நிராகரிப்பு
தூரிகையை அடைந்தும் ,
ஓவியத்தை அடையாத
வர்ணத்தின் துளிகளக்கும் ;
எண்ணத்தில் உதித்தும் ,
காகிதத்தை அடையாத
கவிதையின் வார்த்தைகளுக்கும் ;
கோவிலில் இருந்தும் ,
பூசையினை அடையாத
தெய்வங்களின் சிற்பங்களுக்கும் ;
மனதில் வாழ்ந்து
நிஜத்தில் மரித்த
என் காதலுக்கும் ;
பேச வார்த்தைகள் இருந்தும்
பகிர்ந்துகொள்ள வலிகள் இருந்தும்
மௌனத்திலேயே அஞ்சலி செலுத்துகிறோம்
எங்களின் நிராகரிப்புகளுக்கு !!
பேசாத வார்த்தைகளும்
பகிராத வலிகளும்
அமைதியாய் கண்ணீர் சிந்தின
எங்களுக்காக!!!