காதல் நாற்று
![](https://eluthu.com/images/loading.gif)
காதல் நாற்று!!
************************
நீ எட்டு எடுத்து
நடந்து வரும் போது
உன்னை தொட்டு பார்க்க
ஆசைப்பட்டது என் உள்ளம்..
நீ ஏறிட்டு என்னை
பார்க்கும் போது எல்லாம்
உன்னை கட்டி பிடிக்க
ஏங்கியது என் இதயம்.
என் மனதில் பட்டு
விட்டாய் நீ...உன்னை
என் மனதில் நாற்றாய்
நட்டு விட்டேன்..நான்.
காதல் நாற்றாய்...நீ
என் மனதிலே வளர்ந்து
சொல்லிவிடு நீ என்னை
காதலிப்பதாக... காத்திருக்கிறேன்..