இப்படிக்கு மேகா -- வேலு

அழகின் கூடாரம்
மெல்ல அடியெடுத்து வைக்கும் அந்தி வானம்
கர்வத்தை கிழித்து காதல் சொல்லும் கண்கள்
காவிய காதல் வரைபடத்தில் மிச்சம்
வளர்பிறையில் முன்றாம் நாள்

மழலை சிரிப்பு
மழை சாரல்
குயிலின் இசை
கோவில் புறா
மல்லிகை மனம்
காலை தென்றல்
மரம் , இலை , செடி கொடிகள் , பூக்கள் ,பழங்கள் , அருவி , எல்லாம் படைக்கப்பட்டது
உன் அழகிற்கு உதாரணம் கொடுக்கவே .....

எழுதியவர் : வேலு (29-Nov-14, 10:26 am)
பார்வை : 114

மேலே