காதலை காத்திருக்க சொல்

காதலை காத்திருக்க சொல்..

ராகுவும் கேதுவும்
அஷ்டம சனியும்
அழகாய் உன்னை சுற்றி
வளம் வருவதால்..

காதல் குகைக்குள்
வராதே..காதல்
கடிதம் வரையாதே
காதல் செய்யாதே..

முள் வேலியாய்
கிரகங்கள்.உன்னை சுற்றி வர
நீ என்னிடம் வராதே.. நாம்
காதலை காத்திருக்க சொல்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (29-Nov-14, 10:53 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 71

மேலே