வினோத்சுப்பையா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வினோத்சுப்பையா |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 27-Mar-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 155 |
புள்ளி | : 48 |
சாதாரண மனிதன்....
ஆனால் ஒரு அசாதாரண விரும்பி ....
அன்னையிடம் கேட்டேன்...
தந்தையிடம் கேட்டேன்...
நண்பன்,
சகோதரன்,
உற்றார்,
என அனைவரிடமும் கேட்டேன்...
" அன்பு , பாசம் , காதல் இவற்றிற்கு உருவமில்லை
உணர்வுதான்" என்று உரைத்தனர்.
அனைவரும் உரைத்தது தவறென்று உணர்ந்தேன்
இவற்றின் மொத்த உருவமென உன்னை கண்ட உடன்...
அன்னையிடம் கேட்டேன்...
தந்தையிடம் கேட்டேன்...
நண்பன்,
சகோதரன்,
உற்றார்,
என அனைவரிடமும் கேட்டேன்...
" அன்பு , பாசம் , காதல் இவற்றிற்கு உருவமில்லை
உணர்வுதான்" என்று உரைத்தனர்.
அனைவரும் உரைத்தது தவறென்று உணர்ந்தேன்
இவற்றின் மொத்த உருவமென உன்னை கண்ட உடன்...
முன்னோக்கிய பயணத்தில்
பின்னோக்கி பயணிக்கன்றன
நினைவுகள்....
கோடை கால இரவில்
வீசிய குளிர் காற்றைவிட
இதமளிக்கின்ற
இளையராஜாவின் இசை...
இவரின்
காதல் பாடலில்
காம கீதத்தில்
அன்னை ஆலாபத்தில்
நட்பின் நடையில்...
இன்னும் பல உறவின்
மொத்த உருவமாய்
அவள்.......
அவள்......
அவள்.....
அவள் வெக்கத்திலும்
இவன் தயக்கத்திலும்
நிர்பது ஏன்?...
இவர்களின் உள்ளங்கால்களை
நீர் இணைத்து போல்
உள்ளங்களை
காதல் இணைத்தனவோ!!!
ஒரு பூஜைக்கும் கோயில் சேராத நான்
முழு பூஜை முடிந்தும்
இடம் விட்டு நகராது இருந்தேன்....
அவள் செய்த மார்களி பூஜையில்
"ஒரு கொலு பொம்மை" போல....
ஒரு பூஜைக்கும் கோயில் சேராத நான்
முழு பூஜை முடிந்தும்
இடம் விட்டு நகராது இருந்தேன்....
அவள் செய்த மார்களி பூஜையில்
"ஒரு கொலு பொம்மை" போல....
இழப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை என்ற மமதையில்
அவளின் நேரடிப்பார்வையை எதிர்நோக்கினேன்...
ஆனால் இழந்துவிட்டேன்
எனது மொத்த கவனத்தை...
பிற செயல்களிலிருந்து....
இந்த அம்மாக்கள்
தோசைக்கல்லில்
நிலவு வார்ப்பவர்கள்
===================
அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது எமக்கு
அம்மா வீடுதான்
===================
அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம்
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம்
===================
பிள்ளைகள்
வெளியூரில்
பணியிலிருக்கும்
ஒரு வீட்டில்,
பக்கத்துவீட்டுக் குழந்தைகள்
சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்
===================
அப்பா வாசம்
வெயில் வாசம்
அம்மா வாசம்
நிலா வாசம்
எமது வீடுகளின்
சமையலறையெங்கும்
நிலா வாசம்
===================
எமக்குக்
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை
அ