கவிமணி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிமணி
இடம்
பிறந்த தேதி :  24-Oct-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Jan-2015
பார்த்தவர்கள்:  349
புள்ளி:  28

என் படைப்புகள்
கவிமணி செய்திகள்
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) மீ மணிகண்டன் மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
06-Mar-2016 7:48 am

மன்னித்து விடுங்கள் சொந்தங்களே இருவரி கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ என நம்பும் முட்டாள்களில் இவளும் ஒருத்தி...இன்றும் ஏதோ கிறுக்கி விட்டேன் பிழைகளை மன்னிக்க வேண்டுகின்றேன். !


உயிரிழந்த பட்டாம்பூச்சி
இலையுதிர்ந்த விருட்சம்
ஜன்னலில் பறக்கும் சீலை.(1)

பால் கிண்ணத்தில்
கயல் விளையாடுகிறது
நதியில் நிலா(2)

உதிரம் தோய்ந்த வானம்
கோப அலைகளோடு ஈழத்தில் மண்டைஓடுகள்(3)

புரட்சி சிந்துகிறது
எழுத்தாளனின் வற்றிய
பேனா(4)

மலட்டு மேகம்
கட்டறுத்து ஓடும் காட்டாறு
விவசாயியின் கண்ணீர்
(5)
ஜாதிக் கொலை
நிகழ்த்திய அமைச்சர்
மேடைப்பேச்சு ஒன்றே எங்கள் ஜாதி(6)

நிசப்த இரவில்
நிகழும் சுகப்பி

மேலும்

சிறப்பான ஹைக்கூ அனைத்தும் புரட்சி சிந்துகிறது எழுத்தாளனின் வற்றிய பேனா உண்மையான வரிகள்...... 31-Mar-2016 4:04 am
ஹைக்கூ வரிகள் அனைத்தும் அருமை ! 29-Mar-2016 3:45 pm
அருமையான வரிகளுடன் படைப்பு 28-Mar-2016 8:51 pm
அனைத்தும் மிக அருமை..! வாழ்த்துக்கள்..! 20-Mar-2016 11:56 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
20-Jan-2016 7:04 pm

இரவும் பகலும்
இணைந்தே இருக்கின்றது உன்
விழிக்குள் கறுப்பு வெள்ளையாய்

பாவம் என்னைப் போல் இன்னும் எத்தனை உயிர்கள்
பலியாக போகின்றனவோ
***************************

கொடிய விஷம் யாதெனில்
உன் கன்னத்து குழிகளே
தினமும் தான் பிணமாகிறேன்.
****************************

நீ பிரம்மனின் மகளாய் தான் இருக்கக்கூடும்
என்னையும் மாற்றிவிட்டாய் படைப்பாளியாய்.
**********************

முற்றத்து மல்லிகையோ
தோட்டத்து மல்லிகையோ
தோற்றுத்தான் போகிறது
உன் சோம்பல் முறிப்பின் முன்
****************************

நானும் திருநங்கை தான்
உன் ஆடைகள் அணிந்து உறங்குகிறேனே.!
****************************

என்ன

மேலும்

அருமை தோழமையே 25-May-2016 4:57 am
அருமை.... அழகு..... அற்புதம்..... பாராட்டுக்கள் 09-Feb-2016 5:16 pm
முற்றத்து மல்லிகையோ தோட்டத்து மல்லிகையோ தோற்றுத்தான் போகிறது உன் சோம்பல் முறிப்பின் முன் **************************** மிகவும் பிடித்த வரிகள் அருமை - மு.ரா. 09-Feb-2016 2:37 pm
பல இடங்கள் ரொம்ம அழகாக இருக்கிறது 09-Feb-2016 1:50 pm
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) மீ மணிகண்டன் மற்றும் 10 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
21-Dec-2015 1:09 am

இரத்ததானமளித்து நீ மகிழ்ந்திருந்த
உன் பிறந்த நாளில்
உன் விழிகளைக் விழுங்கிய தருணம்
எனக்குள் நிகழ்ந்தது மரணம்...

வனப்புகள் திமிறிக்குலுங்கும்
நீவொரு பூக்காடு...
நினைவுகள் பற்றி எரிகிறதே
ஏதினியெனக்குச் சாக்காடு...

ஊனமுற்ற மனைவியை
முதுகில் சுமந்தபடி வரும்
மனிதரைக் கண்டு
ஓடி ஒளிந்து கொள்கிறது
வாழ்வின் சுமை...

குப்பைத் தொட்டியில் உணவிற்காய்
தெரு நாயோடு சண்டையிடும்
பைத்தியத்தைக் கண்டும்
மிஞ்சிய உணவைக்கூட
அவனுக்களிக்காது
சாக்கடையில் ஊற்றுகிறது
ஒரு தெளிந்த பைத்தியம்...

தெரு ஓவியனொருவன்
மேகத்

மேலும்

வருக தேவ் , தாங்கள் யுவராஜ் போல் எல்லா கவிகள் மூலமும் சிக்சர் அடிப்பவர் நான் எப்போதாவது.. தங்கள் கஜல் வாசித்தேன் கலக்கல்.. வருகைக்கும் ,இனிய கருத்திற்கும் மிக்க நன்றி. 26-Jan-2016 1:27 pm
// தெரு ஓவியனொருவன் மேகத்தை ஓவியமாய் வரைந்திருந்தான் மழை பெய்யத் துவங்கியது மேகத்தை மேகம் அழித்தது ஓர் இனத்தின் யுத்தம் இதிலிருந்துதான் துவங்கியிருக்கக்கூடும் // பவுண்டரி பவுண்டரியான விலாசல்களுக்கிடையே இதுபோன்ற ஹெலிகாப்டர் ஷாட்களை சடக்கென்று அடித்துவிடுவதில் நீர் கில்லாடி சாரே 24-Jan-2016 2:32 am
நன்றி அக்கா , வருகையில் வாசிப்பில் இனிய கருத்தினில் மிக்க மகிழ்ச்சி. 18-Jan-2016 9:17 pm
நன்றி நண்பரே, வருகையில் வாசிப்பில் இனிய கருத்தினில் மிக்க மகிழ்ச்சி. 18-Jan-2016 9:16 pm
Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) தர்மராஜ் பெரியசாமி மற்றும் 11 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
25-Dec-2015 12:27 am

இதழ்விரித்த மென்மலரே உதிர்கையிலும் புன்னகைத்தாய் !
இமைமூட முடியாமல் கனவினிலும் ஏன்வதைத்தாய் ?

உன் மின்னல் பார்வை பண்ணிய மாயம்
என் நெஞ்சை வெட்டிச் செய்தது காயம் !

புரிதலில்லாப் பெண்மையிடம் அடகுவைத்தேன் நெஞ்சை
மீட்டெடுக்க முடியாமல் துணைக்கழைத்தேன் நஞ்சை !

என்னகத்தில் ஏற்றிவைத்தாய் காதலெனும் ஜோதி
நமைப் பிரிக்க கொலைவெறியாய் வந்ததிந்த ஜாதி !

நான்பாடும் பூபாளம் முகாரியாய் ஒலிக்குதே
என்காதல் தில்ருபா மீட்டுவாரின்றித் துடிக்குதே !

உன்பிள்ளைக்கு ஏன் என்பெயரை வைத்தாய்
பேர்சொல்லிக் கூப்பிட்டு என்மனதைத் தைத்தாய் ?

சிதையினிலே கிடக்கையிலே என்னிதயம் உனைத்தேடும்
வராவிட்டால்

மேலும்

மிகவும் நன்றி ! இதை நான் முன்பே எழுதி விட்டேன் . கஸல் தொடர் முடிந்ததும் பதியலாம் என்று இருந்தேன் . ரதீஃப் , காஃபியா இரண்டும் சேர்ந்து மேலேயுள்ள கவிதையில் இருக்கிறதே ...... அலைகடலே வீடான கதையைநான் சொல்லவோ வலைவீசி மீன்பிடிக்கும் பிழைப்பைநான் சொல்லவோ ? கட்டிலில்லை மெத்தையில்லை முப்பொழுதும் படகிலே உப்புக்காற்றில் உறவாடும் வாழ்வைநான் சொல்லவோ ? கடலம்மா மடிதனிலே தவழ்ந்தாடும் பிள்ளைகளின் உடலுக்கு வண்ணமில்லை உண்மைநான் சொல்லவோ ? சாண்வயிறு வளர்ப்பதற்குச் சாமத்திலே கடலிறங்கி ஊண்உறக்கம் தொலைத்துவிட்ட நிலையைநான் சொல்லவோ ? தண்ணீரில் சென்றகணவன் வரும்வரையில் அமைதியின்றி கண்ணீரில் காத்திருக்கும் தவிப்பைநான் சொல்லவோ ? மீன்பிடிக்கப் போனவர்கள் மீண்டுவர முடியாமல் சிறைபிடித்த சோகத்தின் சுவடைநான் சொல்லவோ ? எல்லைகளைத் தாண்டியதாய் பொய்க்குற்றம் சுமத்திவிட்டு துப்பாக்கி யால்சுட்ட அவலம்நான் சொல்லவோ ? பிரச்சனைகள் புரிந்திருந்தும் தீர்வுகாண முடியாமல் திண்டாடித் திசைதிருப்பும் அரசைநான் சொல்லவோ ? தத்தளிக்கும் வாழ்க்கையிலே இயற்கையுமே இம்சித்தால் செத்துவிடத் தோன்றிடுமெம் விதியைநான் சொல்லவோ ??? 27-Jan-2016 10:28 pm
ஆஹா சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு விட்டீர்கள் . யாப்பெழுதுவோருக்கும் ஓசை சந்தம் தெரிந்தோர்க்கும் கஜல் எழுதுவது ஹிந்தியில் சொல்வது போல் இடது கை விளையாட்டு . அடுத்து ரதீ ஃ ப் எனும் ஓசை அமைத்து எழுதுவது எப்படி என்று பார்க்கலாம் அதற்கு முன் எனது கஜலுக்கு ஒரு மொழி பெயர்ப்பு இல்லை வரவேற்பு 2 என்ற பதிவை படிக்கவும் சிறப்பாக மிக அழகாக வடிவமைத்திருக்கிறீர்கள். புதுக் கவிதையின் வினோத உவமைகள் பாதிப்பு உங்கள் வரிகளில் இல்லை. ஆதலினால் கஜல் இயல்பாகவும் இனிமையாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள் தொடந்து எழுதுங்கள் அன்புடன்,கஜலன்பன் கவின் சாரலன் 27-Jan-2016 9:20 pm
இது எப்படி இருக்கிறது பாருங்கள் ....!!! ```````````````````````````````````````````````````````` காதலென்றும் அழிவதில்லை பொய்யாக லாகுமோ காவியங்கள் சொன்னகதை பிழையாகிப் போகுமோ ? நாவினிக்கப் பேசியது நெஞ்சினில் நிழலாடுதே காற்றினிலே கரைந்ததுவும் காணாமல் போகுமோ ? இமயத்தின் மீதேறி என்ஆவி போகுதே இமைமூட முடியாமல் தவிக்கவிட லாகுமோ ? சங்கதிகள் பேசிடும் சங்கீதம் நீயன்றோ செவிகேட்க முடியாமல் செய்துவிட லாகுமோ ? தீபத்தின் சுடராக உன்னைநான் பார்க்கிறேன் தீமூட்டி பூக்குளிக்கும் எண்ணம்வர லாகுமோ ? இதயத்தில் கயிறுகட்டி இழுத்துவிளை யாடினாய் இக்கட்டு வரும்போது அறுத்துவிட லாகுமோ ? வானவில்லைத் தூளியாக்கி உன்னைத்தா லாட்டினேன் வான்முகிலுள் ஒளிந்துக்கொண்டு தேடவிட லாகுமோ .....?? 27-Jan-2016 8:46 pm
முதல் இரண்டு பதிவும் கஜலின் இரட்டை வரி அமைப்பிற்கு மட்டும் நியாயம் செய்கிறது . மூன்றாவது கஜலுக்கு தொடர்பற்ற புதுக்கவிதை இதழ்விரித்த மென்மலரே உதிர்கையிலும் புன்னகைத்தாய் ! இமைமூட முடியாமல் கனவினிலும் ஏன்வதைத்தாய் ? ---கஜலுக்கு ஏற்ற காதல் உணர்வு . நன்று .இது மத்லா ஆரம்ப சேர் அல்லது கவிதை வரிகள் இதன் ஈற்று ஓசை தாய் அல்லது ஆய் உன் மின்னல் பார்வை பண்ணிய மாயம் என் நெஞ்சை வெட்டியது ஆறாத காயமாய் என்காதல் தில்ருபா மீட்டுவாரின்றித் துடிக்குதே ! நான்பாடும் பூபாளம் ஒலிக்குதே முகாரியாய் இது போல் மற்ற இரு வரிகளையும் அமையுங்கள் ஒவ்வொரு இரட்டை வரிக்குப் பின் முதல் வரியை சொல்லிப் பாருங்கள் அல்லது பாடிப்பாருங்கள் கஜல் ஓசை யுடன் நெஞ்சைத் தொடும் இனிமை புரியும். இந்த கா ஃ பியா கஜலின் recurring aspect . அது திரும்பத் திரும்ப வந்து ஒலிக்கும் போதுதான் கஜல் கஜலாகும். நான் என் பதிவில் பரிந்துரைத்திருக்கும் ஹிந்தி அல்லது உருது கஜல்களை you tube ல் கேட்கவும் . எனது மொழி பெயர்ப்புகளையும் படிக்கவும். இனிய கஜல்கள் சிறப்பாக எழுதலாம் வாழ்த்துக்கள் கவிப்பிரிய ஷ்யாமளா ராஜசேகர் அன்புடன், கவின் சாரலன் 27-Jan-2016 7:35 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Sep-2015 7:26 pm

செந்தமிழுக்கு இல்லா உரிமை
வெண்மேனிக்கு
கிடைக்கும் என்றால்
செல்லாதே பெண்ணே -அங்கு
சீரழிப்பார் உன்னை .

பொட்டுக்கும் தாலிக்கும்
பொருந்தாத இடமெனில்
புறக்கணித்து விடு பெண்ணே-அங்கு
பெருமை இழப்பாய் பெண்மையின் .

விழிநோக்கா ஆண்மையின்
விழி பார்க்க நேர்கையில்
விலகிசெல் பெண்ணே
அங்கு -பாதுகாக்கப்படும் உன் பத்தினித்துவம்.

ஆடம்பர வாழ்வை விரும்பாதே
பெண்ணே
அழிந்திட கூடும் உன் அடக்கத்தின்
சிறப்பு .

பெற்றவர் முதியோர் என வெறுக்காதே பெண்ணே
இரண்டு பெற்ற பின் தளர்ந்திடுவாய்
மறக்காதே கண்ணே .

பணம் மட்டும் போதும் என்று
எண்ணாதே பெண்ணே.
பாசத்தையும் சேமித்திட
கற்றுக்கொள் கண்ணே

மேலும்

நன்றி நன்றிகள் ஐயா .ரசனையில் மகிழ்ந்தேன் . 29-Sep-2015 9:20 pm
பெண்ணிற்கு அறிவுரை சிறப்பு நான் மிகவும் ரசித்த வரிகள் விழிநோக்கா ஆண்மையின் விழி பார்க்க நேர்கையில் விலகிசெல் பெண்ணே அங்கு -பாதுகாக்கப்படும் உன் பத்தினித்துவம். பெற்றவர் முதியோர் என வெறுக்காதே பெண்ணே இரண்டு பெற்ற பின் தளர்ந்திடுவாய் மறக்காதே கண்ணே . -----வாழ்த்துக்கள் கவிப்பிரிய கயல் விழி அன்புடன் , கவின் சாரலன் 29-Sep-2015 9:04 pm
நன்றி நன்றிகள் மா . 29-Sep-2015 11:26 am
நன்றிகள் தோழமையே . 29-Sep-2015 11:22 am
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Manikandan s மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Sep-2015 9:34 am

அங்காங்கே தொடாதே
புல்லரித்து போகின்றதே உடல்
சில்லென்ற உன் தழுவலில் .

உச்சி முதல் பாதம் வரை
உரசாதே .
உஷ்ணத்தின் பாஷைகள்
உறங்கி விடுகின்றது
நொடிப்பொழுதில் .

மோசக்காரனடா நீ .!
மொத்த முத்தம் உனக்கே
வேண்டும் என்று
கார்முகிலாகி இதழ்களை
சுவைக்கின்றாயே .!

துளி துளியாய் துள்ளி வந்து
சீண்டுகின்றாயா என்னை -இரு நானும் தூய்மையாகிகொள்கின்றேன் உன் தீண்டலில் .

தடுத்திட தடுத்திட மனம் நினைக்க
தனைமறந்த கரங்கள் மட்டும்
ஏந்திக்கொள்வது உன்னை -தன்
ஏக்கம் தவிர்பதற்கோ .

சிலர் உன்னை வஞ்சிக்கின்றனர்
நாசகாரன் என்று .
பலர் உன்னை வரவேற்கின்றனர்
கொடைவள்ளல் நீ
என்று.
நான் உ

மேலும்

அருமை 19-Sep-2015 12:32 am
நன்றி நன்றி மணி . 17-Sep-2015 11:35 am
சிலிர்க்கின்றேன் கயல்..வாழ்த்துக்கள் 17-Sep-2015 7:35 am
நன்றி நன்றி சார் . 16-Sep-2015 8:38 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Manikandan s மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Aug-2015 8:32 am

சின்ன சின்ன சண்டைகளும்
செல்லகோபங்களும்
விரும்பப்படும் குறும்புகளும்
வெற்றிக்கான முதல்படியும் .

துன்பத்தில் சாய
தோளும்
தோல்வியை எதிர்க்க
துணையும்
குறைவின்றி கொடுக்கும்
உறவென்றால்
நட்பே என்று நானுரைப்பேன் .

சுயநலம் என்பது இங்கில்லை
பிறர்நலன் காப்பதே இதன் கொள்கை
அழகும் அசிங்கமும் பார்ப்பதில்லை
அதனால் தான் "நட்பு "அழகென்பேன்

அறியாவயதில் தொடங்கி விடும்
அறுபது வயதிலும் தொடர்திருக்கும் .
உயிரோடு உயிராக கலந்திருக்கும்
உயிரை கொடுக்கவும் துணிந்திருக்கும்.

தாயிற்கு பின் எதுவென்றால்
தயக்கமின்றி நான் சொல்வேன் நட்பென்று..!!!


என் உயிரான நண்பர்கள் அனைவருக்கும் ஹா

மேலும்

இந்த மாத இறுதி பட்டியலில் வந்துள்ள இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்... 15-Sep-2015 10:12 am
நன்றி தோழமையே .வாழ்த்துக்கள் 03-Aug-2015 7:46 am
நல்ல நட்பு கவிதை... தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்... வாழ்துக்கள் தொடருங்கள்.. 03-Aug-2015 12:46 am
நன்றி மணி .வாழ்த்துக்கள் 02-Aug-2015 11:09 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Jul-2015 2:25 pm

சீதையின் தங்கையாம்
சீண்டிப் பார்கிறான் .
சினத்துக்கொள்வதே இல்லை நான்
இங்கு என்ன இராமாயணமா நடக்கின்றது
தீக்குளித்து நிருபிப்பதற்கு .!

கலியுகம் இதில் கண்ணகிக்கும்
கள்ளக்காதலி பட்டம் தான் .

உச்சி முதல் பாதம் வரை
உடையால் மூடிக்கொண்டால்
இச்சை கொண்டவர் எச்சில் வடிக்காமலா செல்வார்
இஞ்சு இஞ்சாய் அளவெடுத்து
ஏற்ற இரக்கமும் பார்த்து சொல்வார் .

தலை குனிந்து நாம் நடந்தால்
தடவி பார்க்க நினைத்திடுவார்
தலை நிமிர்ந்து நடந்துவிட்டால்
தாவணி சரிவை ரசித்திடுவார் .

சாரியில் தொப்புளும்
சட்டையில் அக்கிலும்
சுடிதாரில் பின்புறமும்
மிடியில் முன்புறமும்
கவர்ச்சி தூக்கும் என்ப

மேலும்

நன்றி நன்றி 25-Aug-2015 12:00 pm
நன்றி நன்றி 25-Aug-2015 11:59 am
நன்றி நன்றி 25-Aug-2015 11:58 am
நன்றி நன்றி 25-Aug-2015 11:57 am
கவிமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2015 1:17 pm

பிரசவ அறை முன்பாக மூன்று ஆண்கள் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களின் மூன்று மனைவிகளும் பிரசவத்திற்காக உள்ளே போய் இருந்தார்கள்.

முதலில் ஒரு நர்ஸ் இரண்டு குழந்தைகளுடன் வெளியே வந்தாள். முதலில் அமர்ந்து இருந்தவனிடம்,
'கங்க்ராட்ஸ் சார்.. உங்களுக்கு இரட்டை பிறவிகள் பிறந்திருக்கு' என்று குழந்தைகளை காண்பித்து விட்டு சென்றாள்.

நர்சு சென்றதும் அவன் மற்ற இருவரிடமும், 'நான் 2 ஜி ஸ்பெக்டிரம் கம்பெனியில வேலை பாக்குறேன், அதுக்கு ஏத்த மாதிரியே ரெண்டு குழந்தைங்க பிறந்திருக்கு' என்றான்.

அடுத்த நர்சு மூன்று குழந்தைகளோடு வந்து இரண்டமாவனிடம், '
கங்க்ராட்ஸ் சார்.. உங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருக்கு'

மேலும்

நகை சுவை! 22-Aug-2015 7:13 pm
ஹி ஹி 22-Jul-2015 8:17 am
அருமை 05-Jul-2015 2:27 pm
கவிமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2015 4:58 pm

தொடர்ந்து மருந்து கேட்டு வரும் ஒரு நோயாளியிடம்

"என்னது இன்னமும்மா மாறலை.?"

"இல்லை டாக்டர். எனக்கும் பயமா இருக்கு"

"ஒரே வழிதான்..."

"சொல்லுங்க டாக்டர்... என்ன வழி...?"

"இந்த இரண்டு விரல்ல ஒண்ணு தொடுங்க..!"

"எதுக்கு டாக்டர்?"

"உங்களுக்கு மருந்தை மாத்தணுமா…இல்ல நர்ஸை
மாத்தணுமான்னு முடிவு செய்யணும்…!"

மேலும்

கவிமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2015 4:54 pm

பரீட்சை முடிந்த பின்னர் வீடு வந்த மகனிடம்

அப்பா: எத்தனை பதில் தவறாக எழுதி இருந்த?

மகன்: ஒன்னே ஒண்ணுதான் அப்பா எழுதினன்!

அப்பா: ஒன்னே ஒன்னுதானா? அப்ப மத்த 9 பதிலும் சரியா?

மகன்: மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே!

மேலும்

haa haa haa haa ...... 02-Jul-2015 5:34 pm
கவிமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2015 2:05 am

தாத்தா தன்னோட பேத்தியை பாடசாலைக்கு அழைத்து சென்றுகொண்டிருக்கும் போது,

"நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்….பாப்பா நடந்து வருவியாம்."

"வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…"

மேலும்

இப்ப எல்லாம் இப்படித்தான் 20-May-2015 3:31 pm
இ இ இ... 20-May-2015 3:30 pm
குட்டிஷ் பன்ற அட்டகாசம் கொஞ்சம் நஞ்சம் இல்லை அருமையா சொன்னீங்க .. 20-May-2015 3:08 pm
ம்ம் இப்போ எல்லா குட்டிசும் இப்படி தான் ... 20-May-2015 2:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (95)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
தமிழன் சாரதி

தமிழன் சாரதி

திருவண்ணாமலை
அசுபா

அசுபா

திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (95)

JAHAN POTTUVIL

JAHAN POTTUVIL

SRI LANKA - POTTUVIL
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (95)

அஜந்தா ஜினி பகீரதன்

அஜந்தா ஜினி பகீரதன்

யாழ்ப்பாணம்
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

பிரபலமான எண்ணங்கள்

மேலே