கடவுளே என் பொண்டாட்டிய காப்பாத்து
பிரசவ அறை முன்பாக மூன்று ஆண்கள் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களின் மூன்று மனைவிகளும் பிரசவத்திற்காக உள்ளே போய் இருந்தார்கள்.
முதலில் ஒரு நர்ஸ் இரண்டு குழந்தைகளுடன் வெளியே வந்தாள். முதலில் அமர்ந்து இருந்தவனிடம்,
'கங்க்ராட்ஸ் சார்.. உங்களுக்கு இரட்டை பிறவிகள் பிறந்திருக்கு' என்று குழந்தைகளை காண்பித்து விட்டு சென்றாள்.
நர்சு சென்றதும் அவன் மற்ற இருவரிடமும், 'நான் 2 ஜி ஸ்பெக்டிரம் கம்பெனியில வேலை பாக்குறேன், அதுக்கு ஏத்த மாதிரியே ரெண்டு குழந்தைங்க பிறந்திருக்கு' என்றான்.
அடுத்த நர்சு மூன்று குழந்தைகளோடு வந்து இரண்டமாவனிடம், '
கங்க்ராட்ஸ் சார்.. உங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருக்கு' என்று சொல்லிவிட்டு சென்றாள்.
இரண்டாமவன், 'நீங்க சொன்னது கரெக்ட் தான், நான் 3 ஜி ஸ்பெக்டிரம் கம்பெனியில வேலை பாக்குறேன், அதுக்கு ஏத்த மாதிரியே மூணு குழந்தைங்க பிறந்திருக்கு' என்றான்.
உடனே மூன்றாமவன், 'ஐயோ கடவுளே என் பொண்டாட்டிய காப்பாத்து' என்று பிராத்தனை செய்தான்.
மற்ற இருவரும், 'ஏன் பயந்து போய் கடவுளை பிராத்திக்கிறீங்க?' என்று கேட்டார்கள்.
அதுக்கு மூன்றாமவன், நான் 7-அப் கம்பெனியில
வேலை பாக்குறேன்.