தமன்னா பாட்டு
என் ப்ரெண்ட்டு கார்த்திக் புதுசா LED TV வாங்க போனான்...
எனக்கு நிறைய விஷயம் தெரியும்னு நம்பி... என்னையும் கூட வர சொன்னான்...
( அவன் தலையெழுத்து அப்படி இருந்தா
நாம என்ன பண்ண முடியும்..?!! )
சரினு போனேன்...
கடையில சாம்சங், சோனி ரெண்டு டி.வி பிடிச்சி இருந்தது... எதை வாங்கறதுனு ஒரே குழப்பம்...
என்கிட்ட கேட்டான்..
"சாம்சங் வாங்கிக்கோ..!! "
" மச்சி... அதைவிட சோனி 4 ஆயிரம் ரூபா ஜாஸ்திடா.. அதையே வாங்கிக்கலாமே..!! "
" பணத்தை வெச்சி எல்லாம் தரத்தை எடை போடதே... நீ கம்முன்னு சாம்சங்கே வாங்கு..!! "
" இல்ல மச்சி... என்ன இருந்தாலும் சோனி ஜப்பான் கம்பெனி.. சாம்சங்.. கொரியா இல்ல..!! "
" இன்னிக்கு டெக்னாலஜி எங்கையோ போயிடுச்சு... இப்ப போயி ஜப்பான், கொரியானு பேசிட்டு.... "
"சரி.. முடிவா என்ன சொல்ற..?!!
" முடிவா இல்ல... நான் ஆரம்பத்துல இருந்து ஒண்ணே தான் சொல்லிட்டு இருக்கேன்.. சாம்சங் எடு...!! "
" ஓ.கே...!! நீ சொன்னா எதாவது விஷயம் இருக்கும்...!! அதையே வாங்கறேன்.. "
33,000 ரூபாய்க்கு பில் போட்டு சாம்சங் டிவியை வாங்கி.... கார்ல வெச்சிட்டு இருக்கும்போது கார்த்திக் கேட்டான்.....
" அது ஏன் மச்சி... இந்த டிவியே தான் வங்கணும்னு ஒற்றை கால்ல நின்னே..?!! "
" ஹி., ஹி., ஹி., இந்த டி.வில தானே தமன்னா பாட்டு ஓடிச்சி....!!! "
"அட... நாதாரி பயலே...."