நடமாடும் நதிகள்--30 கயல்விழி

மன்னித்து விடுங்கள் சொந்தங்களே இருவரி கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ என நம்பும் முட்டாள்களில் இவளும் ஒருத்தி...இன்றும் ஏதோ கிறுக்கி விட்டேன் பிழைகளை மன்னிக்க வேண்டுகின்றேன். !


உயிரிழந்த பட்டாம்பூச்சி
இலையுதிர்ந்த விருட்சம்
ஜன்னலில் பறக்கும் சீலை.(1)

பால் கிண்ணத்தில்
கயல் விளையாடுகிறது
நதியில் நிலா(2)

உதிரம் தோய்ந்த வானம்
கோப அலைகளோடு ஈழத்தில் மண்டைஓடுகள்(3)

புரட்சி சிந்துகிறது
எழுத்தாளனின் வற்றிய
பேனா(4)

மலட்டு மேகம்
கட்டறுத்து ஓடும் காட்டாறு
விவசாயியின் கண்ணீர்
(5)
ஜாதிக் கொலை
நிகழ்த்திய அமைச்சர்
மேடைப்பேச்சு ஒன்றே எங்கள் ஜாதி(6)

நிசப்த இரவில்
நிகழும் சுகப்பிரசவம்
அல்லி(7)

சிவப்பு விளக்கு
சிக்கிக் கொள்கிறது விட்டில் பூச்சியும்
விபச்சார விடுதி(8)

படைப்பில் யார் செய்த
தவறு
தலைகீழாய் வெளவால்
(9)

ஓய்கிறது மழை
வெளிச்சக் கீற்றுகள் நாளை
வானிலை அறிக்கை
(10)


நன்றிகள் : தொடர் தொகுப்பாசிரியர் திரு ஜின்னா அண்ணா
முகப்பட வடிவமைப்பு : திரு கமல் காளிதாஸ் சார்.
தொடர் ஒருங்கிணைப்பு : திரு T,N முரளி ஐயா
முகப்பட பெயர் செதுக்கல் : திரு ஆண்டன் பெனி சார்

எழுதியவர் : கயல்விழி (6-Mar-16, 7:48 am)
பார்வை : 669

மேலே