நன்றியுணர்தல்

வாழ்வில்
EMI செலுத்தாமல்
நிலுவையிலுள்ள
"நன்றிக் கடன்களின்" பட்டியல்
நீண்டுக் கொண்டே செல்கிறது....

காலம் அவற்றை
தள்ளுபடி செய்துவிடும் என
காத்திருக்கப் போவதில்லை

கட்டி முடித்துவிட
முடிவு கட்டிவிட்டேன்!

இதோ என் முதல் தவணை...

நன்றி ஞாலமே!
நன்றி வானமே!
நன்றி என் சக ஜீவிகளே!

இம்மண்ணில் - என்
இருப்பிற்குக் காரணமாய்
இருப்பவர்கள் நீங்கள்!

எழுதியவர் : விநாயகன் (5-Mar-16, 9:55 pm)
சேர்த்தது : விநாயகன்
பார்வை : 72

மேலே