சின்ன சின்ன கவிதைகள்

சின்ன சின்ன கவிதைகள்

சுண்ணாம்பு அடித்திருக்கிறார்கள்
வீடெங்கும் வெண்மை
நட்சத்திரங்கள்

தலை வணங்கிய
ரோஜா பூ
உடனே தலை
வெட்டப்பட்டு கூடைக்கு சென்றது

சிக்கன் பிரியாணி சாப்பிட்டபடியே
ஜீவ காருண்ய நிகழ்ச்சியை
தொலைகாட்சியில் பார்த்து
கொண்டிருந்தான்

மகன் காரில் கிறுக்கிவிட்டான்
தந்தை அவனை
தண்டித்த பின்பு
கிறுக்கியதை பார்க்க
‘ஐ லவ் யூ டாடி’

உயிருள்ள மீன்
கை நழுவி
குளத்தில் விழுந்து
தூண்டிலை நோக்கி
போய் கொண்டிருக்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (23-Nov-24, 10:21 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 98

மேலே