விநாயகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  விநாயகன்
இடம்:  தமிழகம். சேலம்
பிறந்த தேதி :  08-Oct-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jan-2016
பார்த்தவர்கள்:  214
புள்ளி:  33

என்னைப் பற்றி...

" செய்யும் தொழிலை சீர்தூக்கிப் பார்க்கின் நெய்யும் தொழிலுக்கு நிகரேதும் இல்லை "
அடிப்படையில் நான் ஒரு பட்டு நெசவாளி. படித்தது பத்தாம் வகுப்பு. படிப்பது வாழ்க்கைப் படிப்பு. ஆம் இந்தப் பூமியெனும் பாடசாலையில் நான் நிரந்தர 'மாணவன்'! வாழ்வையும், மனிதர்களையும், இயற்கையையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

மேற்சொன்னவைகளை வாசிக்கும் பொழுது அவை எனக்குள் ஏற்படுத்தும் உணர்ச்சி மாற்றங்கள் என் அகக் கண்ணாடியில் பட்டு பிரதிபலிக்கின்றன. அவற்றிற்கு எழுத்துருவம் தர எத்தனிக்கும்போது வாசகனாய் இருக்கும் நான் வாசிக்கப்படுபவனாய் மாறுவதைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன்.

என் படைப்புகள்
விநாயகன் செய்திகள்
விநாயகன் - எண்ணம் (public)
25-Aug-2018 6:40 pm

உன் பேச்சு இசையடி

உன் மௌனம் 
எனக்கு கசையடி!

மேலும்

விநாயகன் - விநாயகன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Jan-2017 7:56 pm

சலிப்பூட்டும் செயல்களைவிடவும்

களிப்பூட்டும் செயல்களே
சிறந்த விளைவுகளைத் தருகின்றன!

மேலும்

விநாயகன் - எண்ணம் (public)
25-Aug-2018 5:13 pm

    உன் பேச்சு இசையடி

உன் மௌனம் எனக்கு கசையடி!

மேலும்

விநாயகன் - எண்ணம் (public)
25-Aug-2018 5:12 pm

    உன் பேச்சு இசையடி

உன் மௌனம் எனக்கு கசையடி!

மேலும்

விநாயகன் - எண்ணம் (public)
25-Aug-2018 5:10 pm

    உன் பேச்சு இசையடி

உன் மௌனம் எனக்கு கசையடி!

மேலும்

விநாயகன் - விநாயகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2016 9:28 pm

நதிக்கும் மொழிக்கும்
பெண் பெயரிட்டோம் - அதை
மதித்தும், துதித்தும் கும்பிட்டோம்
பிறக்கும் பிள்ளை
பெண்ணாய் இருந்தால் - கண்
திறக்கும் முன்பே கொன்றிட்டோம்

அணுவைப் பிளந்தோம்
அமைதியை இழந்தோம்
அணுகுண்டை அடைகாக்கும் பூமி - இனி
அபயம்தான் அளிக்கமோ சாமி?

அறிவியலும் இன்று அழிவியலை நோக்கி...
கர்பத்தை ஊடுருவும் கதிர்கள்
விதையிலேயே அறுவடை செய்யும்
விநோதம்!

பெண் சிசுக்கள் என்ன கொசுக்களா?
ஆக்ஸிஜன் அனைத்தும்
ஆணுக்கு மட்டுமா?

உனக்கு மட்டுமே பூமி சொந்தமா? - மேகம்
உனக்கு மட்டும்தான் நீரைச்சிந்துமா?

எதுவும் இங்கு
நிரந்தரமில்லை - இதை
அறிந்தும் இங்கே பெண்ணாய் பிறக்கச்
சுதந்திரம் இல்

மேலும்

விநாயகன் - விநாயகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2016 6:27 pm

டீச்சர்
பாடதிட்டத்தை பரிசீலியுங்கள் டீச்சர்
தொலையாமல் தேடலும்
புரியாமல் பாடமும்
அறியாமைபுரத்தின் அட்ரஸ் என்று
அறியுங்கள் டீச்சர்

குதிரை - வண்டி இழுக்கும்
கழுதை - பொதி சுமக்கும் என
கற்றுத் தந்தீர்கள்
நாங்கள் குழந்தைகளா ? கழுதைகளா ?
பிறகேன் இந்த
புத்தகப்பொதி சுமக்கும் விதி ?

கோலெடுத்தால் குரங்காடும் என்றீர்கள்
நாங்களும் ஆடுகிறோமே
டார்வின் கொள்கை தவரறா டீச்சர் ?
நாங்கள் மனிதனிலிருந்து வந்த குரங்குகளா ?

இடியின்குரலில்
"படி "என்பீர்கள்
படிக்கிறோம்
ஏடுகள் கிழிய கிழிய
எழுத்துகள் அழிய அழிய
எப்போதும் படிக்கிறோம்

வீட்டுப்பாடம் தந்துத்தந்து
வெண்டைக்காயாய் விரல் ஒடித்தீர்

மேலும்

விநாயகன் - மோகன் சிவா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2016 11:59 am

எங்கே இறைவன். .?

மேலும்

இறவன் இருக்கும் இடம் முனிவர்கள் லால் மட்டும் உணர முடியும் அவன் இல்லை என்று யாரலும் சொல்ல முடியாது அவன் அமாநிசிய சக்தி பூமியில் பரவி இருக்கிறது 02-Apr-2016 3:04 am
இல்லை என்று சொல்லொக்கொள்ளும் நாத்திகனுக்கும்.. இருக்கிறார் என்று சொல்லி கொள்ளும் ஆத்திகனுக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருக்கிறார் இறைவன்.. 01-Apr-2016 10:11 pm
இறைவன் இருக்கிறார் , ஆம் அவரவர் மனதில் இருக்கிறார் 31-Mar-2016 1:43 pm
அவரைத்தான் நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன்.. கிடைத்தால் கூறவும்.. 31-Mar-2016 1:27 pm
விநாயகன் - விநாயகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Mar-2016 10:59 pm

எண்ணிலடங்கா கவிதைகள் - உன்
கண்ணிலடங்கிக் கிடப்பதை எண்ணி
வியக்கிறேன்.. தமிழே!

மேலும்

விஜயலட்சுமி அளித்த கேள்வியில் (public) Kannan Siva மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Mar-2016 2:43 pm

நான் எழுத்தாளர்க ஏன்ன செய்ய வேன்டும் ?

மேலும்

மிக்க நன்றி 29-Mar-2016 8:43 am
மனதில் தோன்றுவதை வார்த்தையாக வடிக்கத்தெரிய வேண்டும் அவ்வளவுதான். 28-Mar-2016 10:44 pm
நிறைய வாசிக்க வேண்டும். நிறைய யோசிக்க வேண்டும் 28-Mar-2016 4:59 pm
முதலில் கவிதை எழுதி பாருங்கள் அதன் பின் சமர்பிக்கவும் தோழி. 24-Mar-2016 4:07 pm
விநாயகன் - vaishu அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2016 11:58 am

பெண் சுதந்திரம் என்று இருக்கா?
பெண் வீட்டு படியிறங்கி வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வரும் வரை எந்த தீங்கும் நேராது என்று ஒருவித அச்சம் இல்லாமல் செல்ல பெண்களுக்கு சுதந்திரம் உண்டா?
வீட்டிற்குள்ளே பெண் பிள்ளைக்கும், ஆண் பிள்ளைக்கும் நிலவும் பாகுபாடு: கல்வி, வேலை,சுயதொழில் இதில் சுதந்திரம் உண்டா?
வெறும் ஆடையும், அலங்கராமுமே உன் சுதந்திரம் என்று பெண்ணை ஒரு வட்டத்திற்குள் சுருக்கியது தான் பெண் சுதந்திரமா?

மேலும்

கல்பிள்ளையாரே வீதியில் இறங்கினால் பாதுகாப்பு வேண்டும் காலம், பெண்பிள்ளை மட்டும் என்ன விதிவிலக்கா என்ன ? ஆதியும் அந்தமுமாய் இருக்காமல் பாதியிலும் பப்பாதி என்றால் இப்படித்தான்..... 21-Mar-2016 1:29 am
வீட்டு வேலை முதல் விண்வெளி செல்வது வரை எல்லாத் துறைகளும் பெண்கள் பங்களிப்பு உள்ளது.. எல்லாச் சுதந்திரத்துக்கும் ஓர் அளவு கோல் உண்டு அதற்கிணங்க பெண்கள் தம்மைத் தாமே முன்னேற்றிக் கொண்டால் சமூகத்தில் சம நிலை எய்தமுடியும்.. ஆண்கள் மது அருந்துகிறார்கள் புகைக்கிறார்கள் தாமும் செய்தால் என்ன கேட்பது பெண் சுதந்திரம் அல்ல. மேலும் பெண்கள் பாதுகாப்பை அந்நாட்டுச் சட்ட திட்டங்கள் உறுதி செய்ய வேண்டும் ..பெரும்பாலான மேலை நாடுகளில் பெண்கள் அச்சமில்லாமல் இரவு நேர பணி முடித்து எவ்வித இடையூறும் இன்றி வீடு திரும்புகிறார்கள்..இதற்குக் காரணம் அந்நாடுகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டமும் ஒழுங்கும் ஆகும்.. 20-Mar-2016 5:42 am
பெண்ணியம் பேசிய ஆண்களிடம் ஓர் கன்னியம் இருந்தது - பாரதியின் காலத்தில். இன்று உள்ள ஆண்அடிமைகளிடம் பதிலில்லை உங்கள் கேள்விக்கு 19-Mar-2016 10:24 pm
விநாயகன் - சிவா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2016 5:35 pm

உங்கள் கல்லறையில்
உங்களுக்காக நீங்கள்
எழுத நினைக்கும்
வாசகம்

மேலும்

ஏமாற்றி கொண்டே இருங்கள் ! உனக்கான ஏமாற்றம் வரும் வரை ,! 26-Apr-2016 3:22 pm
வாழ்கிற நாளை விடுத்து கல்லறைக்கான வாசகத்தை தேடி வீணாகிவிட்டேன், கருவறை வாய்ப்பு மீண்டும் கிடைத்தால், காலத்திலும் என் வாசகத்தை பதிப்பேன் 21-Mar-2016 1:19 am
தேடல்.... தேடல்....தேடல்....தேடல்.... வாழ்க்கையைத் தேடி அலைவோரே ! சற்றே நில்லுங்கள். ஜனனமும் மரணமும் மட்டுமே உண்மை. இடையில் அனைத்தும் மாயை. இப்போது எனக்கு புரிந்தது. இங்கே வரும்போது உங்களுக்கும் இது புரியும். 20-Mar-2016 3:58 pm
நன்றிங்க ..!! 20-Mar-2016 11:20 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
சிவா

சிவா

படுக்கபத்து,தூத்துக்குடி
விஜயலட்சுமி

விஜயலட்சுமி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சிவா

சிவா

படுக்கபத்து,தூத்துக்குடி
ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

விஜயலட்சுமி

விஜயலட்சுமி

திருநெல்வேலி
சிவா

சிவா

படுக்கபத்து,தூத்துக்குடி
மேலே