பெண் சிசுக் கொலை

நதிக்கும் மொழிக்கும்
பெண் பெயரிட்டோம் - அதை
மதித்தும், துதித்தும் கும்பிட்டோம்
பிறக்கும் பிள்ளை
பெண்ணாய் இருந்தால் - கண்
திறக்கும் முன்பே கொன்றிட்டோம்

அணுவைப் பிளந்தோம்
அமைதியை இழந்தோம்
அணுகுண்டை அடைகாக்கும் பூமி - இனி
அபயம்தான் அளிக்கமோ சாமி?

அறிவியலும் இன்று அழிவியலை நோக்கி...
கர்பத்தை ஊடுருவும் கதிர்கள்
விதையிலேயே அறுவடை செய்யும்
விநோதம்!

பெண் சிசுக்கள் என்ன கொசுக்களா?
ஆக்ஸிஜன் அனைத்தும்
ஆணுக்கு மட்டுமா?

உனக்கு மட்டுமே பூமி சொந்தமா? - மேகம்
உனக்கு மட்டும்தான் நீரைச்சிந்துமா?

எதுவும் இங்கு
நிரந்தரமில்லை - இதை
அறிந்தும் இங்கே பெண்ணாய் பிறக்கச்
சுதந்திரம் இல்லை.

கடவுள் உண்டா தெரியாது - அவர்
கறுப்பா, சிவப்பா தெரியாது
இருப்பினும் அவருக்கோர் விண்ணப்பம்

"இனி இந்திய மண்ணில்
ஜனிக்கும் சிசுக்கள்
கள்ளிப் பாலையும்
ஜீரணிக்க வேண்டும்"!

எழுதியவர் : விநாயகன் (29-Mar-16, 9:28 pm)
சேர்த்தது : விநாயகன்
பார்வை : 72

மேலே