புத்தி தடுமாறிப் போவானே
காக்கா முட்டை கறுப்பில்லை!
ஆண் காக்காவிற்கு பெண் காக்கா
மீது சந்தேகம்!
சந்தேகம் தீராத வியாதி,
அது வந்தாலே தடுமாறும்
அறிவென்னும் ஜோதி!
காக்காவிற்கு
சந்தேகம் வந்தால்
சகித்துக் கொள்ளும்!
மனிதனுக்கு சந்தேகம் வந்தால்
புத்தி தடுமாறிப் போவானே - ஐயோ
பாவி! வெட்டிப் போடுவானே!