கந்தனைப் பாடிவோம் என்றும் ---- சிந்துப்பாடல்
கந்தனைப் பாடுங்க ளேன் --- நம்மைக்
----- காத்திடும் ஆண்டவன் சாத்திர மே .
வந்திடும் தீவினை யே --- மாறித்
----- தந்திடும் நல்வினை சிந்தனை யே.
என்றென்றும் வேண்டிடு வோம் -- நல்
----- ஏற்றங்கள் எங்கிலும் சாற்றிடு வோம் .
கன்றென ஏங்கிடு வோம் -- வாழ்வில்
----- காற்றாகி நின்றிட போற்றிடு வோம் .
மாற்றங்கள் வந்திடு மே --- உன்னில்
----- மாட்சிமைப் பக்தியும் வென்றிடு மே .
ஊற்றுங்கள் நன்னெறி கள் -- என்றும்
------ உன்னத வேண்டுதல் கேட்டிடு மே .
பார்த்திடும் நேரமெங் கும் --- நல்லப்
------ பாடல்கள் எத்திக்கும் கேட்டிடு வீர் .
வார்த்தைகள் சின்னமன் றோ --- நாளும்
------ வாழ்வினில் பக்தியும் அங்கமன் றோ .
தெய்வத்தைப் பாடுங்க ளேன் -- நம்மைத்
------ தென்றலாய்க் கானமும் காத்திடு மே .
உய்த்துணர் வேண்டிடும் உள்ளமன் றோ .
------ உத்தம ராகுதல் நன்மையன் றோ .
ஓடிடும் துன்பங்கள் தான் --- எங்கும்
------ ஓங்கிடும் கந்தனின் பொன்னொளி தான்
வாடிடல் வாழ்வினில் தான் --- நீங்கி
------ வாடாத நன்மைகள் வந்திடும் தான் .
நன்மையும் செய்திடுங் கள் -- நாளும்
----- நன்னெறி ஓர்ந்திட நின்றிடுங் கள் .
பன்முகம் காட்டிடு வான் --- பாரில்
------ பாவத்தைப் போக்கிடப் பாய்ந்தோடு வான் ,
இன்னலை நீக்கிடு வான் --- வாழ்வில்
------ இன்பத்தை ஈந்திட வந்திடு வான் .
என்றனைக் காத்திடு வான் --- என்றும்
------ ஏற்றத்தை நல்கிடச் செய்திடு வான் .
கொஞ்சிடும் கந்தனே வா --- எங்கள்
------ கோட்டையின் வாயிலை காத்திட வா .
விஞ்சிடும் பக்தையும் நான் --- என்றன்
------- வித்தகத் தெய்வமாய் வேண்டினேன் நான் .
குன்றினில் தெய்வமும் நீ --- நாங்கள்
----- குன்றேறி கும்பிடும் கந்தனும் நீ
மன்றாடி வேண்டிடு வோம் -- என்றும்
----- மங்காது போற்றியும் வாழ்ந்திடு வோம் .