அலைகள்
![](https://eluthu.com/images/loading.gif)
கடற்கரை ஓரம் மனதினில் பாரம்
நடந்துவந்தேன் நான் ஒருமாலை நேரம்
ஆறுதல் சொல்ல யாருமே இல்லை
தேறுதல் இன்றி தவித்திட்டேன் தொல்லை
சிறுசிறு அலைகள் கூட்டமாய் வந்து
என்பாதம் தொட்டு சேர்ந்தது கூட்டு
நானதைத் துரத்த அதுவெனைத் துரத்த
நகர்ந்தது என்னைவிட்டு பாரங்கள் தூரத்தே
தன் உப்புச்சுவையால் என் உப்புக்கண்ணீரை
துடைத்து அலையே மனதிற்குள் மழையே
தூரத்தில் தெரியும் பெரும் அலைகூட
பக்கத்தில் வந்ததும் சிற்றலை ஆனதே
துன்பமும் அதுபோல் துவண்டிடல் கூடா
மோதியே பார்த்தால் துண்டாகிடும் அல்லவா
பயந்தே ஓடினால் அதுநம்மைத் துரத்தும்
சுனாமியாய் மாறி நமைமூழ் கடிக்கும்
அலைகளைப் போல மனபலம் பெற்றிட்டால்
பாறைபோன்ற துன்பத்தை தகர்த்திட முடியும்
ஓரிடம் வெதும்பி நிற்பது வாழ்க்கையா
பலஇடம் சென்று சாதித்தல் நன்று..