அன்பழகன் செந்தில்வேல் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அன்பழகன் செந்தில்வேல்
இடம்:  TIRUNELVELI
பிறந்த தேதி :  09-May-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-May-2016
பார்த்தவர்கள்:  144
புள்ளி:  11

என்னைப் பற்றி...

வெறும் மனிதன்

என் படைப்புகள்
அன்பழகன் செந்தில்வேல் செய்திகள்
அன்பழகன் செந்தில்வேல் - வாணிகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2016 11:18 am

விருதுநகரில் வேர் விட்ட விருட்சம்,
நல்லாட்சி தந்த நீ மனிதரில் உச்சம் ,
பதவியெல்லாம் உனக்கொரு துச்சம் ,
எதிரியிடம் கொண்டதில்லை ஒரு அச்சம் .

போராட்டம் பல கண்டாய் , இயக்கங்கள்
சில கொண்டாய் , நடை பயனம்
மேற்கொண்டாய், சிறைவாசம் செய்து வந்தாய் ,
காங்கிரசில் நீ  இருந்தாய் ,
மக்கள் பணி செய்தே வாழ்ந்து வந்தாய் !

குருவுக்கும் போதிக்கும் சீடன் நீயே !
அன்னளிடம் மறுத்துப் பேசிய ஆளுமையே !
கல்யாணம் ஆகவில்லை என்றிடினும் ;
காதல் மட்டும் செய்தாயே தாய்
நாட்டினையே !

அரச

மேலும்

கர்மவீரர் புகழ் அருமை . ஆனால் நாம் புகழ் மட்டுமே பாடமுடியும் . பிறந்த தலைகளில் இவர் போல் யாருமில்லை . இனி ஒரு தலைவன் பிறக்கவே தொடர்ந்து துதி பாடலாம் காமராசருக்கு ! 24-Feb-2020 11:22 am
அருமை 26-May-2016 7:39 pm
கல்வி வரம் தந்த கற்பகத் தருவே ! அருமைன்ய வரிகள் தோழி 24-May-2016 6:56 pm
அன்பழகன் செந்தில்வேல் - நிலாகண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2016 12:38 pm

குழந்தை
குமரியாகி என்னை
விட்டுப்போன அன்றிரவு
மியாவ் என்றது
மகளுக்கு நான் சொன்ன பூனைக்கதைகள்.
பாசத்தின் பொறியில் சிக்கிக்கிடக்கிறேன்
ஒரு காய்ந்த
கருவாடென நான்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அப்பாவிடம்
காண்பிக்க
காத்திருந்து தூங்கிப்போன குழந்தையின் அருகில்
அவள் வரைந்த
குட்டி அணிலும் தூங்கிக்கொண்டிருந்தது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எச்சில் ஒழுக
ஏதோ முனகியபடி
விளையாடிக்கொண்டிருக்கும்
குழந்தைகளை
தாய் தொட்டிலுக்குள்
கிடத்தி
தாலாட்டும்போதெல்லாம்
பிறகு
விளையாடவருவதாய் சொல்லிமறைந்து
விடு்கிறான் கடவுள்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நேற்றிரவு
மீன்ப

மேலும்

வாசித்து சொக்கினேன் ...நன்று 01-Jun-2016 6:41 pm
மிக்க நன்றி அண்ணா நலமா 31-May-2016 4:00 pm
மிக்க நன்றிகள் தோழரே 31-May-2016 3:59 pm
மிக்க நன்றி சர்பான் 31-May-2016 3:59 pm
அன்பழகன் செந்தில்வேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2016 11:53 am

அப்பா அணியும் சட்டையின்
கழுத்துப் பட்டை நைந்து கிழிந்தவை

அப்பாவின் செருப்புகள்
வேகமாக தேய்பவை

அப்பா தரும் மீன்கள்
முட்கள் அற்றவை

அம்மாவின் அடி வயிற்று
பிரசவத் தழும்புகளுக்கு
இணையானவை தான்
அப்பாவின் உள்ளங்கை காய்ப்புகள்

அப்பாவின் சட்டையில் கமழும்
வியர்வை வாசம்
ஒப்பில்லா மகிழ்ச்சி தருவது

அப்பாவின் இதயம்
வானத்தைப் போல விசாலமானது

தன் சிறகுகளை கத்தரித்து
குஞ்சுகளுக்கு பொருத்தும்
அதிசயப் பறவை அப்பா

அப்பாவின் கண்களில் வழியும்
கண்ணீர்த் துளிகள்
அப்பாவின் கன்னம் மட்டுமே அறிந்தது....

-----------------------------------------------
அன்பழகன் செந்த

மேலும்

தாயின் கருவில் பத்து மாதம் தான் வழிகளும் ஏக்கங்களும்... ஆனால் அவைகள் தந்தையின் வாழ்நாள் முழவதும் தொடர்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-May-2016 2:40 pm
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Mar-2015 5:11 am

இந்த அம்மாக்கள்
தோசைக்கல்லில்
நிலவு வார்ப்பவர்கள்

===================

அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது எமக்கு
அம்மா வீடுதான்

===================

அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம்
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம்

===================

பிள்ளைகள்
வெளியூரில்
பணியிலிருக்கும்
ஒரு வீட்டில்,
பக்கத்துவீட்டுக் குழந்தைகள்
சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்

===================

அப்பா வாசம்
வெயில் வாசம்
அம்மா வாசம்
நிலா வாசம்
எமது வீடுகளின்
சமையலறையெங்கும்
நிலா வாசம்

===================

எமக்குக்
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை

மேலும்

திரு அன்பு அழகன் அவர்களே தங்கள் கருத்துக்கு நன்றி 03-Jun-2016 12:39 am
தங்கள் கருத்துக்கு நன்றி மு.ரா 03-Jun-2016 12:38 am
அருமையான கவிதைகள் வாழ்த்துக்கள் 26-May-2016 11:48 am
என்ன சொல்ல, படிக்க படிக்க கண்களில் நீர் - மு.ரா. 13-Mar-2016 9:32 pm

தெப்பக் குளத்துப் பாசியாய்
மன வெளியெங்கும்
உயிர்ப்புடன் வியாபித்திருப்பது
குழந்தைகளின் புன்னகை

ஆணி வேரைப் பற்றியிருக்கும்
மண்ணைப் போன்று
நம் வாழ்வை இறுகப் பற்றியிருப்பது
குழந்தைகளின் பிஞ்சுக் கரங்கள்

வாழ்வின் மீதான
நம்பிக்கையை தக்க வைக்கும்படி
வந்து பிறக்கின்றன குழந்தைகள்

கனவுகளின் நீட்சி குழந்தைகள்

அரிசி களைகையில் வந்து
ஒரு வாய் வாங்கிச் செல்லும் கடவுள்கள்

சின்னஞ் சிறிய
குடை கிடைத்தால் போதும்
வானம் கிடைத்து விட்டதாக
மகிழ்ந்து விடுவார்கள்

ஒரு மண் புழுவைப் பார்த்தால்
யானையைக் கண்ட மன நிறைவு

ஒரு அப்பளத்தில்
முழு விருந்தை ருசித்த திருப

மேலும்

குழந்தைகள் அருகே வாழ்வதும் சுகமே!அழகான நினைவுகள் குழந்தை எனும் காவியத்தால் உயிருக்குள் எழுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-May-2016 5:39 pm
அழகிய பார்வை !! தொடர்ந்து எழுதவும் !! 25-May-2016 11:26 am
அன்பழகன் செந்தில்வேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2016 11:38 am

கொக்கிரகுளத்தில் புறப்பட்டு
இரு சக்கர வாகனத்தில் வீடு வந்தடைய
இவ்வளவு நேரமா என்று
கோபித்துக் கொண்டாள் மனைவி
ஆரைக்குளம் ரெயில்வே கேட்டில்
திருச்செந்தூர் ரெயிலில் கையசைத்தபடி சென்ற
ஜன்னலோர சிறுமிக்கு பதில் சைகை காட்டி
வழியனுப்பி வைத்தேன் என்று சொல்லி இருக்கலாம்
திடியூர் ஆற்றுப் பாலம் அருகில்
சாலையோரம் கொத்துக் கொத்தாய் நிற்கும்
பனை மரங்களை கடக்கையில்
பூமி சுழலுவதை உணர்ந்தேன் என்று
சொல்லி இருக்கலாம்
பிரான்ஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் அருகில்
சிவப்பின் குழந்தைகளாய்
பல்லாயிரம் இளஞ் சிவப்பு நிற தாமரைகள்
பூத்து நிற்கும் குளத்தை
சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந

மேலும்

அழகை சுமந்த இயல்பான வரிகள் 26-May-2016 7:56 am
இயற்கையுடன் பின்னின் பிணைந்த வருடல்கள் எல்லா கவியின் காட்சிகளிலும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-May-2016 5:56 pm
அன்பழகன் செந்தில்வேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2016 11:35 am

சமையல் கியாஸ் தீர்ந்து விடுகிறது
அரண்மனை 2 வெளியாகிறது
காய்ச்சல் கண்ட குழந்தைகள்
ஜாலி டிரெயின் ஐஸ் கிரீமும் கேட்கின்றனர்
அக்கா மகள் பூப்பெய்தி விடுகிறாள்
மனைவிக்கு பிறந்த நாள் வருகிறது
விருந்தினர்கள் வருகை தருகின்றனர்
டாட்டா ஸ்கை சந்தா முடிந்து விடுகிறது
இஸ்திரி செய்து மடித்து வைக்கப்பட்ட சட்டைகளிலும்
டைரி புத்தகங்களில் ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா வென்று
அவனும் அவளும் தேடுகின்றனர்
ஏ டி எம் ல் இருந்த கடைசி 100 ரூபாயும்
பெட்ரோலுக்கு செலவாகி விடுகிறது
கடைசியில் செருப்பும் அறுந்து விடுகிறது
மாத ஊதியக் காரனின்
மாதக் கடைசி நாட்கள் துயர் மிகுந்தது

மேலும்

நிதர்சனக் கவிதை மிகவும் அருமை . 26-May-2016 7:48 am
அரசு ஊழியர்கள் மாதந்தோறும் படும் சிரமங்களை எடை போடுகிறது ஒவ்வொரு வரிகளும் 25-May-2016 7:54 pm
நடுத்தர vaalkkaiyin mukavariyil thanjam konta nitharsanankal ivaikal இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-May-2016 5:54 pm
உண்மை நிலை எத்தனையோ வீடுகளில் வாழ்த்துக்கள்... 25-May-2016 2:21 pm
அன்பழகன் செந்தில்வேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2016 11:34 am

தெப்பக் குளத்தில் விழுந்திருக்கும்
நீராழி மண்டப நிழல் போல
குளத்து நீரில் மிதக்கும்
ஒற்றைக்கால் கொக்கின் பிம்பம் அறியாமல்
நீந்தும் மீன்கள்

சூரியனை சலனப் படுத்தியபடி
தாமரை விதையொன்று
சேற்றில் புதையும்

குளத்தை சலனப் படுத்தாமல்
தண்ணீருக்குள் நீந்தும் முக்குளிப்பான்
சட்டென்று தலை நீட்டி
உங்களுக்கு சொர்க்கம் காட்டும்

தண்ணீருக்கு மேல்
அரை வட்டமடிக்கும் மீன்களை
அலகில் கவ்விச் செல்லும் நாரைகள்

தலை நிறைய கள்ளுடன்
கரையில் நிற்கும் பனை மரங்கள்
நீருக்குள் குப்புற விழுந்து கிடக்கும்

குளத்து நீரில்
இரவில் கவியும் பிறை நிலா
படகு விட்டு மகிழும்

தியானம்

மேலும்

அப்பா ! குளத்திற்கு இவ்வளவு விசயங்களா ? குளத்தில் கல் வீசி அதில் வரும் காம்பஸ் இல்ல வட்டங்களையும் பிம்பங்களும் கண்டேவியந்த எனக்கு இது மிகவும் அதிகம்தான் . நிச்சயமாக நீங்கள் இயற்கையை தியானிபபவர்தான் . உங்கள் தியானத்தை மனைவியோ மாதச் சம்பளமோ கலைக்க முடியாது . 26-May-2016 8:10 am
உண்மைதான்..அமைதிக்காய் பல நேரங்களில் இயற்கை தான் கை கொடுக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-May-2016 5:53 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
விஜயலட்சுமி

விஜயலட்சுமி

திருநெல்வேலி
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

இவரை பின்தொடர்பவர்கள் (8)

வாணிகுமார்

வாணிகுமார்

உடுமலைப்பேட்டை
கீதா பரமன்

கீதா பரமன்

ஆலங்குடி
மேலே