பாலைவனக் கவிதைகள் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பாலைவனக் கவிதைகள் |
இடம் | : சுப்பிரமணியபுரம் |
பிறந்த தேதி | : 30-Jul-1955 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-May-2016 |
பார்த்தவர்கள் | : 330 |
புள்ளி | : 30 |
பிறப்பிடம் ஸ்ரீலங்கா. தமிழகத்தில் சொந்தவூர் புதுக்கோட்டை கொத்தமங்கலம். தற்போது வாழும் இடம் அறந்தாங்கி அருகில் சுப்பிரமணியபுரம். மின்வாரியத்தில் வருவாய் மேலாளராக பணியாற்றினேன். பொழுது போக்கு கவிதைகள் படைப்பது.
நாம் நள்ளிரவில்
பெற்ற சுதந்திரத்திற்கு
வயது அறுபத்தெட்டு
அந்நியனை துரத்தினோம்
கயவர்களிடம் சிக்கினோம்
இரவிலும் பகலிலும்
சுதந்திரக் காற்றில்லை
மகளிருக்கு நம்மானிலத்தில்
வீதியிலே நடந்து செல்லும்
பெண்மீது திராவக வீச்சு
ரயில் ஏறக் காத்திருக்கும்
சுவாதி கொடூரனால் கொலை
முக நூலில் முகம் காட்டிய
வினுபிரியா தற்கொலை
ஆறு வயது மழலைகள்
ஆறறிவாளர்களால் சீரழிவு
எங்கே செல்கிறது நம் நாடு
எங்கே நாம் பெற்ற சுதந்திரம்
புத்தன் பிறந்த பூமியில்
இத்தனைக் கொலைகளா
எத்தர்களின் கைகளில்
நம் நள்ளிரவுச் சுதந்திரம்
நீதியின் கண்கள் மட்டுமல்ல
கைகளும் கட்டப்பட்டுள்ளன!
மழலையில் முதன்முதலாய்
பொம்மை வண்டி இழுத்து
மகிழ்ந்த நினைவலைகள்
சிறுவனாகி முதன்முதலாய்
இருச்சக்கர வண்டியை
விழுந்தெழுந்து மிதித்த
இனிய விழுப்புண்கள்
இளைஞனாகி முதன் முதலாய்
டிவி எஸ் சூப்பரில் பறந்த
புதிய அனுபவ அலைகள்
இளமையின் முதிர்வில்
முதன் முதலாய் மகிழுந்தை
இயக்கி வீதிவலம் வந்த
மகிழ்ச்சி மழைக் குளியல்
இப் பசுமை நினைவலைகள்
நினைத்தாலே இனிக்கும்
தேன் பலாச் சுளைகள்
ஆற அமர்ந்து பேசிய
ஆற்று மணல் மேடுகள்
அலைகளுடன் விளையாடிய
கடலோரக் கரைகள்
பின்னிய விரல்களுடன்
நடை பயின்று மகிழ்ந்த
வயல் வரப்புகள்
சிறகடித்துப் பறந்த
பசுஞ்சோலை நிலங்கள்
திருட்டுத்தனமாய் நுழைந்து
மாங்கனிகளை ருசித்த
மாமரச் சோலைகள்
இளங்காற்று முத்தமிட
இடைவெளியின்றி
படுத்துருண்ட புல் வெளிகள்
எங்கும் நான் தேடுகின்றேன்
தொலைந்து போன கவிதையை
அன்பு இதயங்களே!
எனக்கு மரணம் கிடையாது
உலகம் உள்ளளவும் -நான்
வாழ்ந்துகொண்டே இருப்பேன்
எனக்கு தோல்விகளே கிடையாது
ஏனென்றால் உங்கள் மனதில்
எங்கோ ஒரு மூலையில்
என் உயிர்த்துடிப்பிருக்கும்
என்னைப் புரிந்துக்கொண்டால்
சாதி மத மோதலில்லை
குடும்பங்களில் புகைச்சல் இல்லை
விவாக ரத்துவழக்குகள்
நிலுவையில் இருக்காது
நான் உங்களின் முகவுரை
முடிவுரை அல்ல
தவறான புரிதலால்
நீங்களே எழுதிக்கொள்கிறீர்கள்
உங்கள் முடிவுரையை
அன்புக் காதலர்களே
வாழ்வில் அவசரப்படாதீர்கள்
காதல் தோல்வி சிறு சறுக்கல்தான்
துணிச்சலுடன் எழும்புங்கள்
பாதைகளை மாற்றுங்கள்
பசுமையான
சமையல் கியாஸ் தீர்ந்து விடுகிறது
அரண்மனை 2 வெளியாகிறது
காய்ச்சல் கண்ட குழந்தைகள்
ஜாலி டிரெயின் ஐஸ் கிரீமும் கேட்கின்றனர்
அக்கா மகள் பூப்பெய்தி விடுகிறாள்
மனைவிக்கு பிறந்த நாள் வருகிறது
விருந்தினர்கள் வருகை தருகின்றனர்
டாட்டா ஸ்கை சந்தா முடிந்து விடுகிறது
இஸ்திரி செய்து மடித்து வைக்கப்பட்ட சட்டைகளிலும்
டைரி புத்தகங்களில் ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா வென்று
அவனும் அவளும் தேடுகின்றனர்
ஏ டி எம் ல் இருந்த கடைசி 100 ரூபாயும்
பெட்ரோலுக்கு செலவாகி விடுகிறது
கடைசியில் செருப்பும் அறுந்து விடுகிறது
மாத ஊதியக் காரனின்
மாதக் கடைசி நாட்கள் துயர் மிகுந்தது
கண்களால் கைது செய்தாய்
பார்வையால் சிறை வைத்தாய்
கோபத்தால் தண்டித்தாய்
கட்டளையால் கண்டித்தாய்
அன்பால் அரவணைத்தாய்
புன்னகையால் விடுவித்தாய்
இதயத்தில் இடம் தந்தாய்
வாழ்க்கையின் பொருள் தந்தாய்
மொத்தத்தில் என்னிடத்தில் உன்னை
முழுதுமாய் அர்ப்பணித்தாய்!!!
உச்சி வெயில் மண்டை பிளக்கும்
எனக்கு மட்டும் நிலா காயும்
நீ அருகில் இருப்பதால்
இரண்டிற்கும் இடையே இடைவெளி ஒன்று
ஒன்றில்லாமல் இருப்பது நன்று
நின்றுவிட்டது
என் வாழ்க்கை
நின் நேரங்களோடு
நின் மடியோடு
உனக்குள்ளே
தானாக முளைத்த
மரமன்றோ நான்
விதை யார் போட்டது
நீர் யார் வார்த்தது
அன்பெனும் பனிமழை நீ பொழிவது
நிழலாவேன்
உனக்கு மட்டும்
நிஜம் நீ
மட்டும்
ஆழகிடப்பதே ஆனந்தம்
உன் மனக்கடலில்
கரை ஒதுங்கும் உடல்
உயிர் ஆழ(அங்கேயே) தங்கிவிடும்
~ பிரபாவதி வீரமுத்து
புது வீடு,
கட்டிடம் வளர்கிறது-
வட்டியும்...!
வெறுங்கையுடன் பிறக்கின்றான்
வெறுங்கையுடன் இறக்கின்றான்
இடையில் அவன் போடும் ஆட்டங்கள்
ஆர்ப்பாட்டங்கள் சவால்கள் சபதங்கள்
அவை கட்டுக்கடங்காது
என்னை சொந்தம் கொண்டாடி
தன் சொந்தங்களை இழக்கின்றான்
எனக்கு விலை நிர்ணயிக்கின்றான்
என்னை விற்கின்றான் வாங்குகின்றான்
பட்டா என்னிடம் பத்திரம் என்கின்றான்
அயலாருடன் வரப்புச்சண்டை போடுகின்றான்
இரத்தம் சிந்தி நிம்மதி இழக்கின்றான்.
காவல் நிலையங்கள் நீதிமன்றங்கள் என
வழக்கு வாய்தாவுக்கு அலைகின்றான்
சொத்தையும் சுகத்தையும் இழந்து
சோகத்தில் நடைப் பிணமாகின்றான்
இதைத்தான் அன்று அவனது பாட்டன் செய்தார்
பின்பு அவனது தாத்தா செய்தார்
நேற்று அவன் தகப்பன் செய
புயலும் நீ
தென்றலும் நீ
துன்பமும் நீ
இன்பமும் நீ
வலியும் நீ
மருந்தும் நீ
அழுகையும் நீ
சிரிப்பும் நீ
ஆர்பாட்டமும் நீ
அமைதியும் நீ
புதிரும் நீ
புதுமையும் நீ
கோபமும் நீ
குணமும் நீ
கேள்வியும் நீ
பதிலும் நீ
குழந்தையும் நீ
தெய்வமும் நீ!
வந்தாரை வரவேற்பவன் தமிழன்!
வந்தாரை வாழவைப்பவன் தமிழன்!
வந்தாரை அரியணையில் ஏற்றி அழகு பார்ப்பவன் தமிழன்!
தமிழனுக்கு மொழிப் பற்று உண்டு.
ஆனால் மொழிவெறி கிடையாது.
அதனால்தான் தமிழை வளர்ப்போம், தமிழை காப்போம் என முழக்கமிடும் வேற்று மொழிக்கு சொந்தக்காரர்களை தனது தலைவனாக நேசிக்கின்றான். அரியணையில் ஏற்றி ஆளும் உரிமையை அளிக்கின்றான்.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மொழிவாரியாகத்தான் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் அந்த மாநிலத்திற்குச் சொந்தமான மொழி பேசும் நபர்கள் தான் ஆள்கின்றார்கள். ஒரு தமிழன் ஆந்திராவை ஆண்டுவிட முடியுமா? ஒரு தமிழன் கர்நாடகாவை ஆண்டுவிட முடியுமா? ஒரு தமி
அன்னையைப் பிரிந்தேன்
தந்தையைப் பிரிந்தேன்
காதலியைப் பிரிந்தேன்
கை பிடித்த மனைவியை
பெற்ற என் பிள்ளைகளை
கடல் கடந்து பிரிந்தேன்
ஆனால் இன்று என்னால்
உன்னை பிரிய முடியவில்லை
நீ இருந்தால் இவ்வுலகம்
என் கைப்பிடிக்குள்
என் பயணங்கள் உன்னோடு
படுக்கையிலும் நீ அருகில்
தூக்கத்திலும் என் விரல்கள்
உன்னை தொட்டுப்பார்க்கும்
உறவுகளை இணைக்கின்றாய்
உலகத்தைக் காட்டுகின்றாய்
சொல்வதைப் பகிர்கின்றாய்
குறுஞ்ச்செய்திகளை தருகின்றாய்
செல்லே நீ இல்லாவிட்டால்
என் சொல்லும் செயலும்
செல்லாக் காசாகி விடும்