உன்னை பிரிய முடியவில்லை

அன்னையைப் பிரிந்தேன்
தந்தையைப் பிரிந்தேன்
காதலியைப் பிரிந்தேன்
கை பிடித்த மனைவியை
பெற்ற என் பிள்ளைகளை
கடல் கடந்து பிரிந்தேன்
ஆனால் இன்று என்னால்
உன்னை பிரிய முடியவில்லை
நீ இருந்தால் இவ்வுலகம்
என் கைப்பிடிக்குள்
என் பயணங்கள் உன்னோடு
படுக்கையிலும் நீ அருகில்
தூக்கத்திலும் என் விரல்கள்
உன்னை தொட்டுப்பார்க்கும்
உறவுகளை இணைக்கின்றாய்
உலகத்தைக் காட்டுகின்றாய்
சொல்வதைப் பகிர்கின்றாய்
குறுஞ்ச்செய்திகளை தருகின்றாய்
செல்லே நீ இல்லாவிட்டால்
என் சொல்லும் செயலும்
செல்லாக் காசாகி விடும்

எழுதியவர் : மோகனதாஸ் (4-May-16, 3:42 pm)
பார்வை : 280

மேலே