என்றென்றும் காதல்

அன்பு இதயங்களே!

எனக்கு மரணம் கிடையாது

உலகம் உள்ளளவும் -நான்

வாழ்ந்துகொண்டே இருப்பேன்

எனக்கு தோல்விகளே கிடையாது

ஏனென்றால் உங்கள் மனதில்

எங்கோ ஒரு மூலையில்

என் உயிர்த்துடிப்பிருக்கும்

என்னைப் புரிந்துக்கொண்டால்

சாதி மத மோதலில்லை

குடும்பங்களில் புகைச்சல் இல்லை

விவாக ரத்துவழக்குகள்

நிலுவையில் இருக்காது

நான் உங்களின் முகவுரை

முடிவுரை அல்ல

தவறான புரிதலால்

நீங்களே எழுதிக்கொள்கிறீர்கள்

உங்கள் முடிவுரையை

அன்புக் காதலர்களே

வாழ்வில் அவசரப்படாதீர்கள்

காதல் தோல்வி சிறு சறுக்கல்தான்

துணிச்சலுடன் எழும்புங்கள்

பாதைகளை மாற்றுங்கள்

பசுமையான வசந்தம்

உங்களுக்காக காத்திருக்கு

உங்கள் வரவுக்காக

நானும் காத்திருக்கின்றேன்

இப்படிக்கு
"என்றென்றும் காதல்"

எழுதியவர் : மோகனதாஸ் (13-Jun-16, 8:08 pm)
பார்வை : 132

மேலே