நீ நான் இல்லை நாம்
உச்சி வெயில் மண்டை பிளக்கும்
எனக்கு மட்டும் நிலா காயும்
நீ அருகில் இருப்பதால்
இரண்டிற்கும் இடையே இடைவெளி ஒன்று
ஒன்றில்லாமல் இருப்பது நன்று
நின்றுவிட்டது
என் வாழ்க்கை
நின் நேரங்களோடு
நின் மடியோடு
உனக்குள்ளே
தானாக முளைத்த
மரமன்றோ நான்
விதை யார் போட்டது
நீர் யார் வார்த்தது
அன்பெனும் பனிமழை நீ பொழிவது
நிழலாவேன்
உனக்கு மட்டும்
நிஜம் நீ
மட்டும்
ஆழகிடப்பதே ஆனந்தம்
உன் மனக்கடலில்
கரை ஒதுங்கும் உடல்
உயிர் ஆழ(அங்கேயே) தங்கிவிடும்
~ பிரபாவதி வீரமுத்து