சிறந்த சிற்பி அவள்

அவளின் பார்வை

உளியின் கூர்மை

என்னை அவள்

பார்த்தபோது எல்லாம்

நான் செதுக்கப்பட்டேன்

கல்லான என் மனதுக்குள்

காதல் ஊற்று இருப்பதை

தன் பார்வையால் துளையிட்டுக்

காட்டிய தேவதை அவள்

தறுதலையான என்னை

அழகிய கவிஞனாக

செதுக்கிய சிறந்த சிற்பி அவள்

எழுதியவர் : மோகனதாஸ் (23-May-16, 8:40 am)
Tanglish : sirantha sirpi aval
பார்வை : 153

மேலே