மண்ணின் குமுறல்

வெறுங்கையுடன் பிறக்கின்றான்
வெறுங்கையுடன் இறக்கின்றான்
இடையில் அவன் போடும் ஆட்டங்கள்
ஆர்ப்பாட்டங்கள் சவால்கள் சபதங்கள்
அவை கட்டுக்கடங்காது
என்னை சொந்தம் கொண்டாடி
தன் சொந்தங்களை இழக்கின்றான்
எனக்கு விலை நிர்ணயிக்கின்றான்
என்னை விற்கின்றான் வாங்குகின்றான்
பட்டா என்னிடம் பத்திரம் என்கின்றான்
அயலாருடன் வரப்புச்சண்டை போடுகின்றான்
இரத்தம் சிந்தி நிம்மதி இழக்கின்றான்.
காவல் நிலையங்கள் நீதிமன்றங்கள் என
வழக்கு வாய்தாவுக்கு அலைகின்றான்
சொத்தையும் சுகத்தையும் இழந்து
சோகத்தில் நடைப் பிணமாகின்றான்
இதைத்தான் அன்று அவனது பாட்டன் செய்தார்
பின்பு அவனது தாத்தா செய்தார்
நேற்று அவன் தகப்பன் செய்தார்
இன்று அவனும் செய்கின்றான்
அற்பமான வாழ்வு நிரந்தரம் என்று
அகம்பாவமாய் வாழ்ந்து - இறுதியில்
ஆடி என் காலடியில் அடங்குகிறான்
அய்யோ மானிடா
வெறுங்கையுடன் வருகின்றாய்
வெறுங்கையுடன் போகின்றாய்
இடையில் ஏன் உனக்கு இந்த ஆட்டம்!

எழுதியவர் : மோகனதாஸ் (7-May-16, 8:37 pm)
Tanglish : mannin kumural
பார்வை : 60

மேலே