பொன்மகள் கனவில்…
சுரும் பொட்டிட்டான்
கவிதை மெட்டிட்டான்
கன்னியவள் இதயமதில்
காதல் வட்டிட்டாள்…
சின்னவிழி மீன் பார்வை
சிங்கார மொழி தேன்கோர்வை
எண்ண மனமில்லாத எனை
ஏனோ கன்னம் வைத்து கவிழ்த்திட்டாள்…!
சந்தன தேன்குடம் ஆட:
நந்தவனத் தென்றலே கூந்த:லாக
சிந்து மொழியாகும் சின்ன மயில் – இரவில்
வந்து இளமைதன கேட்கிறாள்…!
நானும் சிரிக்கிறேன் தனிமையாக!
நாளும் கவி பாடுகிறேன் இனிமையாக!
தேடும் நினைவு உலகப் பந்தில்
தேவி அவளின் இரீங்காரம்…!
அர்த்தமற்றுச் சிரிக்கிறேன் தயனிமையாக!
அவளை நினைத்து வாடுகிறேன் பைத்தியமாக
ஆசையில் பைத்தியமாக்கி விட்டு
அந்த மயில் போனாள் கனவோடு…!
நாஞ்சில். இன்பா