குங்குமமிட்டவரைச் சொல்லேன்…
குறுமனை மீது வைத்துக் குளிப்பாட்டி,
நறுமண வாசம்தனை பொலிவூட்டி,
நாணத்தைச் சொல்லிய போதினிலே, - இதய
நாண் விட்டுப் போனதடி, - அவன்
இதயம் தொட்டு ஆடியதடி…!
பருவத்தின் பரிசுகள் பால்குடமாக
உருவத்தின் உணர்ச்சிகள் தேனிதழாக
ஊருக்கு உரைத்திட்ட போதினிலே,
உறக்கமது தொலைந்த்தடி, - அவன்
உச்சரிப்பு தொடங்கியதடி…!
கட்டிய தாவணி கற்றிலாடிட
கட்டுமேனி கண்ட்தைக் காட்டிட
காணாயிடைக் கனிவு பூட்டிய போதினிலே, - அவன்
சித்திரத் தூரிகை தொட்ட்தடி, - என்
சித்தமெல்லாம் கெட்ட்தடி…!
யாருக்கும் தெரியாது, - எவருக்கும் புரியாது
என்னை மயக்கியக் கள்வன் அவனை,
ஊருக்கு உரைப்பது சரியோ, - அவன்
பேருக்குக் களங்கம் கொடுப்பதுமுறையோ தோழி…!
குங்கும்மிட்டவரைச் சொல்லேன்
குறு இடை நனையவிட்டவரைச் சொல்லேன்,
கண்பட்டுப் போகுமடி – என்
காதல் கண்பட்டுப் போகுமடி..!
நாஞ்சில். இன்பா