ஓ…இது தான் காதலா

ஓடும் மானே.. ஆடும் மயிலே…!
கூடும் வண்டே… பாயும் நதியே..!
ஓரவிழிப் பார்வை தந்து
சேர வந்தவுடன் மறுத்திட்டு
தலைதனை குனிவது ஏனடி…?
ஓ… இதுதான் காதலா…?

ஓரிடம் நிற்காது ஓடிடும் விழியது,
சேரிடம் இதுவென்று செய்தி சொன்னபின்,
வேறிடம் பார்ப்பது போல எனை
பாராது நடிப்பது ஏனடி…?
ஓ…இதுதான் காதலா…?

கன்னச் சிவப்பழகு, எனக் கண்ட்தும் நிற்ம்பெற்று
சின்னக் குழி காட்டி சித்திரச் சிரிப்பு பெற்று
வண்ண மொழியாகி, - நான்
வந்தவுடன் மௌன மொழிக்குள் போவது ஏனடி?
ஓ… இதுதான் காதலா…?



பூவிதழ் துடிக்க புரியா மொழி அடிக்க
காதல் தேன் பிறை காட்டும் நிலவே…!
கண்ணெதிரில் எனைக் கண்டவுடன்
ஊடல் கொள்வது ஏனடி..?
ஓ…இதுதான் காதலா..?

பாதமது என் திசை நோக்கி விரைய
பார்த்தவுடன் தானாக அது கோலம் வரைய
பார்த்து விடுவேனோ என நீ தெளிய
பயம் உனக்குள் ஏனடி…?
ஓ… இது தான் காதலா…?


நாஞ்சில். இன்பா

எழுதியவர் : -நாஞ்சில் இன்பா (7-May-16, 7:21 pm)
பார்வை : 112

மேலே