கொலுசு

வெள்ளிக் கொலுசு:
வெள்ளிக் கொலுசு :
வெண்நிலவுக் காலில்
துள்ளும் கொலுசு….
காதல் சொல்லும் கொலுசு…!
கரும்புத் தோப்புக்குள்ளே,
விரும்பிப் போகும்போது,
கலகல்வெனச் சிரித்திடும்,
கள்ளக்கொலுசு. –இது
கள்ளக் கொலுசு…!
களத்து மேட்டினிலே
கன்னியவள் போகையிலே,
ஜொலித்துக் காட்டிவிடும்,
ஜொள்ளுக் கொலுசு: இது
ஜொள்ளுக் கொலுசு….!
இராத்திரி வேளையிலே,
இராசாத்தி வருகையிலே,
பத்திரமாய் அத்தையிடம்
வத்திப் போடும் பொல்லாக் கொலுசு : - இது
பொல்லாக் கொலுசு….!

திருவிழாச் சந்தையிலே,
திருமகள் போதையிலே
தித்திக்கும் காதல் சொல்லும்
நல்ல கொலுசு, - இது
நல்லக் கொலுசு…!

முத்துக்கள் தாளத்தில்
மினுமினுக்கும் வடிவத்தில், - காதல்
மூத்த மகளிடம் கவிதையான
செல்லக் கொலுசு – இது
செல்லக் கொலுசு…!

நாஞ்சில். இன்பா

எழுதியவர் : -நாஞ்சில் இன்பா (7-May-16, 7:20 pm)
பார்வை : 125

மேலே