குழந்தையும் நீ தெய்வமும் நீ

புயலும் நீ
தென்றலும் நீ
துன்பமும் நீ
இன்பமும் நீ
வலியும் நீ
மருந்தும் நீ
அழுகையும் நீ
சிரிப்பும் நீ
ஆர்பாட்டமும் நீ
அமைதியும் நீ
புதிரும் நீ
புதுமையும் நீ
கோபமும் நீ
குணமும் நீ
கேள்வியும் நீ
பதிலும் நீ
குழந்தையும் நீ
தெய்வமும் நீ!