மாத ஊதியக் காரனின் மாதக் கடைசி நாட்கள்

சமையல் கியாஸ் தீர்ந்து விடுகிறது
அரண்மனை 2 வெளியாகிறது
காய்ச்சல் கண்ட குழந்தைகள்
ஜாலி டிரெயின் ஐஸ் கிரீமும் கேட்கின்றனர்
அக்கா மகள் பூப்பெய்தி விடுகிறாள்
மனைவிக்கு பிறந்த நாள் வருகிறது
விருந்தினர்கள் வருகை தருகின்றனர்
டாட்டா ஸ்கை சந்தா முடிந்து விடுகிறது
இஸ்திரி செய்து மடித்து வைக்கப்பட்ட சட்டைகளிலும்
டைரி புத்தகங்களில் ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா வென்று
அவனும் அவளும் தேடுகின்றனர்
ஏ டி எம் ல் இருந்த கடைசி 100 ரூபாயும்
பெட்ரோலுக்கு செலவாகி விடுகிறது
கடைசியில் செருப்பும் அறுந்து விடுகிறது
மாத ஊதியக் காரனின்
மாதக் கடைசி நாட்கள் துயர் மிகுந்தது

எழுதியவர் : அன்பழகன் செந்தில்வேல் (25-May-16, 11:35 am)
பார்வை : 88

மேலே