ஜெயப்பிரகாஷ் கண்ணன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஜெயப்பிரகாஷ் கண்ணன் |
இடம் | : காஞ்சிபுரம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-May-2015 |
பார்த்தவர்கள் | : 137 |
புள்ளி | : 18 |
தம்பி...
கடன் வாங்கி குடுத்திருக்குப்பா
மறக்காம போன உடனே எடுத்து
பீஸ் கட்டிரு...
--- இது அப்பா.
கண்ணு...
மறக்காம போய் சேர்ந்ததும்
ஒரு போன் போட்ரு
எகுத்த வீட்டு வாத்தியார் வீட்டுக்கு...
--- இது அம்மா.
ஏ ராசா..
வேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா
வாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா ..
--- இது பாட்டி.
எப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா
நம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும்
--- இது தாத்தா.
என்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா
எப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா
--- இது அண்ணன்.
மறக்காம புது பேனா வாங்கிக்க
என் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்..
--- இது
குழந்தை
குமரியாகி என்னை
விட்டுப்போன அன்றிரவு
மியாவ் என்றது
மகளுக்கு நான் சொன்ன பூனைக்கதைகள்.
பாசத்தின் பொறியில் சிக்கிக்கிடக்கிறேன்
ஒரு காய்ந்த
கருவாடென நான்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அப்பாவிடம்
காண்பிக்க
காத்திருந்து தூங்கிப்போன குழந்தையின் அருகில்
அவள் வரைந்த
குட்டி அணிலும் தூங்கிக்கொண்டிருந்தது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எச்சில் ஒழுக
ஏதோ முனகியபடி
விளையாடிக்கொண்டிருக்கும்
குழந்தைகளை
தாய் தொட்டிலுக்குள்
கிடத்தி
தாலாட்டும்போதெல்லாம்
பிறகு
விளையாடவருவதாய் சொல்லிமறைந்து
விடு்கிறான் கடவுள்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நேற்றிரவு
மீன்ப
வலியோடு வெற்றி
உழைப்பாளியே , உழைப்பின் ஆழியே.!
சில செல்வ சீமான்களின் கர்வ குவியலுக்கு முன்,
உம் சிரம் கரம் உழைத்து பெற்ற அக்னி சாதனையை
கண்டு மலைத்து போனதுண்டு..!
பிறருக்கே ஆனாலும், மூச்சிறைக்க வியர்வை உரித்து
அச்செயலை முடிக்க நீ படும் பாடு,உணர்ந்தேன் உம்மை
அந்த பிரம்மன் படைக்க விதி சமைத்து உழைத்திருப்பானோ.!
இருள் இளைக்கும் வரைதான்
சலிக்காமல் ஒளிந்திருக்கும் சூரியஒளி.
இலக்கை தொடும் வரைதான்
சலிக்காமல் மேனிதழுவும் வியர்வைதுளி..!
உலகிற்கே உரித்தான,உன்னதமான மே தின
நாளில் தொழிலாளர் அனைவரையும்
இருகரங்களால் வணகுகிறேன்...
அன்புடன்
ஜெயப்பிரகாஷ் கண்ணன்
கடல் கண்ட முத்தல்ல
நீ மனித
உடல் கொண்ட முத்து
சிப்பிக்குப் பிறந்த முத்தல்ல நீ
சிந்திக்கப் பிறந்த முத்து
வையகத்தில்
தமிழன்னை வயிற்றில்
வைத்தெடுத்த சொத்து
வைரமுத்து
அன்று வைரம் முத்து
அவற்றின் மதிப்பு கூடியது
பொன்னால் அன்று
நீ பிறந்த
பொன்நாள் அன்று
அனைவருக்கும் கவிதை
கொடுத்த தமிழன்னை
உன்னிடம்தானே அதன்
விதையைக் கொடுத்தாள்
காதலர்களின் ஆத்திச்சூடி
... காதலித்துப்பார் ...
காடு உழுவோரின் அரிச்சுவடி
....மூன்றாம் உலகப்போர் ....
வார்த்தைகளை வார்த்தெடுக்கும்
கவிதை தொழிற்சாலையின் வாரிசு நீ
ஆடம்பரம் இல்லாத
ஆபரணம் உன் பெயர்
பெயர் புவிப்பொன
தேன் சிந்தும் பூக்களை
பார்த்திருப்பீர்கள்.
நீர் சிந்தும் பூக்களை
பார்த்ததுண்டா.?
அது வாசல் தெளிக்கும்
எந்தமிழ் பெண்கள்தான்.!
கோலமிடும் பெண்களால்
வாசல் அழகாகி..
வீதி அழகாகி..
ஊரே அழகாகும்.!
வாசலுக்கும்
வாலிபத்திற்கும்
ஓரு சேர வண்ணம் பூசும்
வண்ணத்துப்பூச்சி
அவர்கள்.!
ஆணுக்குத்தெரியும்
கோலமயில் இருக்கும் வீடு
கோலங்களால் ஆனதென.!
வானம் பார்த்துக்கிடந்த
வண்ணக்கோலங்களால்
வானவில்
வளைந்துபோன காலமது.!
ஒரு முறைக்கு
ஒன்பது வெண்முத்துக்கள் சிந்தும்
மாயச்சிப்பி அவர்களது கைகள்.!
புள்ளியைச்சுற்றிய கோடுகள்
கோலங்களாகி நிற்க
கோலத்தைச்சுற்றியப்புள்ளிகள்
காதலாகி நின்றார்கள்
தென்றலை சுவாசித்து சிரித்த
முகமெல்லாம் கலையிழந்து போனதுவோ .
இறுதி ஊர்வலம் சென்ற வழியெல்லாம்
மலர்களின் சடலங்கள் ஆனதுவோ..
விஞ்ஞான வியப்பின் அடையாளமே.
உம் சாதனை பட்டியலை கணக்கீடு செய்யின்
விண்வெளியின் உச்சம் கூட துச்சம் தானோ.
அனல் கக்கி சீறிபாயும் விண்கலமும் இனி உனது
ஞாபகம் வந்தால் நிதானித்து சோர்ந்து போகுமோ!
இளைய தலைமுறையின் அறிவு பொற்கிழியே
தேசத்திற்கு தோண்டாமல் கிடைத்த புதையலே.
உனது வெற்றிகுவியல்களை சுவீகாரம் எடுத்து
இனி இவ்வுலகமே கம்பீரமாய் வாசித்து அசைபோடும்.
உமது இமாலய சாதனைக்கும்,வெற்றிக்கும்
எனது வணக்கங்கள்.
ஜெயப்பிரகாஷ்கண்ணன்
காஞ்சிபுரம்.
தன்னம்பிக்கையின் முதல் படிகள்
சருக்கலாக இருப்பினும் தொடர்ந்து
சென்றால் அதுவே சாதனைகளின்
துவக்கமாக இருக்கும்.... .
எந்த விருட்சமும் முதலில் மண்ணில்
புதைந்தே விண்ணை தொடும்
மறந்து விடாதே .....
கைபேசியை தொடுதிரைபேசியாய் மாற்றிவிட்டேன்,
உனக்கான என் குறுந்தகவல் தட்டச்சு ,
மெல்லியதாய் அமையட்டும் என்று.
ஆக்ஸிஜனை சுத்திகரித்து சுவாசிப்பவள் நீ.
குளிர்பதனம் செய்துவிட்டேன் என் இதய அறையை!
நீ வசிப்பதற்கு அடியேனின் நன்கொடையாக!..
நிசப்தங்களையும் செவிக்கிரைச்சலாய் பாவிப்பவள் நீ.
கூச்சலிடும் சந்தர்பத்தில் கூட
நாசூக்காக மெல்ல பேச பழகிவிட்டேன்..!
என் தோட்டம் முழுதும் சிவப்பு கம்பளம்,
மரம் உதிர்த்த மலர்கள் உன் பாதம் பட்டு
செத்து விட கூடாது என்பதற்காக..
குவியல் குவியலாய் பல மாற்றங்களை
எனக்குள் நீ செய்ய, என் திசுக்கள் கூட
உத்வேகமாக காத்திருக்கிறது தொடரட்டுமே...
*************
வில்வா தமிழ் T-shirt வாசகம் வடிவம் போட்டி..
இவைகள் கற்பனைக்கோ காட்சிபொருளோ அல்ல
மலிவான விற்பனைக்கு மட்டும்.
சொப்பணத்தில் வாள் எறிந்த கம்பீரத்தின்
நிஜ அடையாளங்கள்..
விண்ணோடும் முகிலோடும் வெண்ணிலவு.
தமிழனின் உழைப்போடும் உடலோடும் உன்னத உறவு.
தரணி எங்கும் தமிழனின் அடையாளம் அறிய
தோல் சுமந்து உறவாடும் உற்ற நண்பன்..
ஜெயப்பிரகாஷ்கண்ணன்
காஞ்சிபுரம்
மெருகேறிய மணி மண்டபத்தில்
மந்திரங்கள் ஓதிட ...!
கையகத்தில் காத்திருந்த அட்சதைகள்
மேல் குதித்து ஆசிர்வதிக்க...!
மங்கள வாத்தியங்கள் பிறவி பயன்
பெற்ற மகிழ்வில்...!
பெரும் ஆனந்த குவியலுக்குள்
இல்லற வாழ்வை துவக்கும் மணமக்களுக்கு
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.
புன்னகையுடன்
ஜெயப்பிரகாஷ் கண்ணன்
காஞ்சிபுரம்
நண்பர்கள் (6)

கவியமுதன்
சென்னை (கோடம்பாக்கம் )

மனிமுருகன்
திண்டுக்கல் , தமிழ்நாடு

பார்த்திப மணி
கோவை

சேகர்
Pollachi / Denmark
