அப்துல் கலாம் என்கிற அற்புத ஆழி

தென்றலை சுவாசித்து சிரித்த
முகமெல்லாம் கலையிழந்து போனதுவோ .
இறுதி ஊர்வலம் சென்ற வழியெல்லாம்
மலர்களின் சடலங்கள் ஆனதுவோ..
விஞ்ஞான வியப்பின் அடையாளமே.
உம் சாதனை பட்டியலை கணக்கீடு செய்யின்
விண்வெளியின் உச்சம் கூட துச்சம் தானோ.
அனல் கக்கி சீறிபாயும் விண்கலமும் இனி உனது
ஞாபகம் வந்தால் நிதானித்து சோர்ந்து போகுமோ!
இளைய தலைமுறையின் அறிவு பொற்கிழியே
தேசத்திற்கு தோண்டாமல் கிடைத்த புதையலே.
உனது வெற்றிகுவியல்களை சுவீகாரம் எடுத்து
இனி இவ்வுலகமே கம்பீரமாய் வாசித்து அசைபோடும்.
உமது இமாலய சாதனைக்கும்,வெற்றிக்கும்
எனது வணக்கங்கள்.
ஜெயப்பிரகாஷ்கண்ணன்
காஞ்சிபுரம்.