ஸலாம் கலாம்
அப்துல் கலாம்
இந்தியத் தாயின் முகம்.
இந்தியாவின் முகவரி.
நம் நாட்டின்
வடக்கே இமயமலை
கிழக்கே அப்துல் கலாம்.
நடமாடிய விஞ்ஞானம்.
தந்தை தெரஸா.
இந்தியாவின் ரியல்
சூப்பர் ஸ்டார்.
இந்தியாவை
தலைநிமிரச் செய்த
இமயத் தமிழன்.
மனித நேயம் மிக்க
மகத்துவ தேசத்தை
மண்ணில் சமைக்க
சுற்றிச் சுழன்ற
மனிதத் தேனி.
அப்துல் கலாம்
காற்றைக் கிழித்த
காவிய நாயகன்.
அவர்
உள்ளத்தில் முளைத்த
ஏவுகணை
விண்ணைத் துளைத்தது.
காதல் கனவில்
மூழ்கித் திளைத்த
இளைஞர் உலகை
இலட்சியக் கனவில்
முத்தெடுக்க வைத்தவர்.
சாதிக்கலாம்
போதிக்கலாம்
இரண்டையும்
ஒருங்கே செய்த
உத்தமர் கலாம்.
வாழ்வின் எல்லைவரை
சிறகு விரித்த
அக்னி பறவை.
காலம் சென்ற கலாம்
காலத்தை வென்ற கலாம்
உமக்கு எங்கள் ஸலாம்.
வல்லரசு விதை
மண்ணில் விழுந்திருக்கிற
து.
விரைவில்
அக்னிச் சிறகு முளைத்து
அகிலம் போற்றும்
வல்லரசு விருட்சம்
வளரும்.
அதற்குஇந்தியனாய்த்
தோள் கொடுப்போம்.
துணை நிற்போம்.
கேப்டன் யாசீன்.