மாற்றங்கள் நிகழ்த்தினாய்

கைபேசியை தொடுதிரைபேசியாய் மாற்றிவிட்டேன்,
உனக்கான என் குறுந்தகவல் தட்டச்சு ,
மெல்லியதாய் அமையட்டும் என்று.

ஆக்ஸிஜனை சுத்திகரித்து சுவாசிப்பவள் நீ.
குளிர்பதனம் செய்துவிட்டேன் என் இதய அறையை!
நீ வசிப்பதற்கு அடியேனின் நன்கொடையாக!..

நிசப்தங்களையும் செவிக்கிரைச்சலாய் பாவிப்பவள் நீ.
கூச்சலிடும் சந்தர்பத்தில் கூட
நாசூக்காக மெல்ல பேச பழகிவிட்டேன்..!

என் தோட்டம் முழுதும் சிவப்பு கம்பளம்,
மரம் உதிர்த்த மலர்கள் உன் பாதம் பட்டு
செத்து விட கூடாது என்பதற்காக..

குவியல் குவியலாய் பல மாற்றங்களை
எனக்குள் நீ செய்ய, என் திசுக்கள் கூட
உத்வேகமாக காத்திருக்கிறது தொடரட்டுமே...

*************

ஜெயப்பிரகாஷ்கண்ணன்
காஞ்சிபுரம்

எழுதியவர் : (22-Jul-15, 5:59 pm)
பார்வை : 89

மேலே