வைரமுத்து

கடல் கண்ட முத்தல்ல
நீ மனித
உடல் கொண்ட முத்து
சிப்பிக்குப் பிறந்த முத்தல்ல நீ
சிந்திக்கப் பிறந்த முத்து
வையகத்தில்
தமிழன்னை வயிற்றில்
வைத்தெடுத்த சொத்து
வைரமுத்து
அன்று வைரம் முத்து
அவற்றின் மதிப்பு கூடியது
பொன்னால் அன்று
நீ பிறந்த
பொன்நாள் அன்று
அனைவருக்கும் கவிதை
கொடுத்த தமிழன்னை
உன்னிடம்தானே அதன்
விதையைக் கொடுத்தாள்
காதலர்களின் ஆத்திச்சூடி
... காதலித்துப்பார் ...
காடு உழுவோரின் அரிச்சுவடி
....மூன்றாம் உலகப்போர் ....
வார்த்தைகளை வார்த்தெடுக்கும்
கவிதை தொழிற்சாலையின் வாரிசு நீ
ஆடம்பரம் இல்லாத
ஆபரணம் உன் பெயர்
பெயர் புவிப்பொன்னால் ஆனது
உன் உயிர் கவிப்பண்ணால் ஆனது
வைரம் வேண்டுமா ?
முத்து வேண்டுமா ? என்றால்
வைரமுத்து வேண்டுமென்பேன் ...
நெருப்புக் கோழிகூட காட்டில்
தீ மிதிப்பதில்லை உன் மீது
வெறுப்பு கொண்டோரைக்கூட
நாட்டில் நீ மிதிப்பதில்லை
அதுவன்றோ உன் மதிப்பு
வார்த்தையையும் ,வரத்தையும், வைரத்தையும்
வேண்டியது பெற்றவனே
பாண்டிய நாட்டின் கொற்றவனே
தோஷம் வேஷம்
இரண்டுமற்ற வைரமே
தமிழுக்கு நீ கிடைத்தது இணையற்ற வரமே
உனை வணங்கித் தாழ்கிறது என் சிரமே ...