நட்பு வேண்டாம்

கடனாலே....
வந்த நட்பு வேண்டாம் ..!!!
சீட்டாலே ....
வந்த நட்பு வேண்டாம் ..!!!
தற்புகழால் ......
வந்த நட்பு வேண்டாம் ...!!!
ஆலயத்தில்
வந்த நட்பு அர்ச்சனைவரை...
குடியாலே
வந்த நட்பு வெறி முறியும் வரை...
கடையாலே
வந்த நட்பு கடன் வாங்கும் வரை..
பயணத்தால்
வந்த நட்பு பாதையில் நின்றுவிடும் ..
இணையத்தில்
வந்த நட்பு வைரஸால் புகும் வரை ...
அறிவிப்பாளரோடு
வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்....
ரெலிபோனால்
வந்த நட்பு மீதிப்பணம் முடிய போகும்....
எதிர்பார்ப்பு எதுவுமே
இல்லாத நட்பு உயிர் போகும்வரை ...!!!
+
கே இனியவன் நட்பு கவிதை