காமராஜர்
விருதுநகரில் வேர் விட்ட விருட்சம்,
நல்லாட்சி தந்த நீ மனிதரில் உச்சம் ,
பதவியெல்லாம் உனக்கொரு துச்சம் ,
எதிரியிடம் கொண்டதில்லை ஒரு அச்சம் .
போராட்டம் பல கண்டாய் , இயக்கங்கள்
சில கொண்டாய் , நடை பயனம்
மேற்கொண்டாய், சிறைவாசம் செய்து வந்தாய் ,
காங்கிரசில் நீ இருந்தாய் ,
மக்கள் பணி செய்தே வாழ்ந்து வந்தாய் !
குருவுக்கும் போதிக்கும் சீடன் நீயே !
அன்னளிடம் மறுத்துப் பேசிய ஆளுமையே !
கல்யாணம் ஆகவில்லை என்றிடினும் ;
காதல் மட்டும் செய்தாயே தாய்
நாட்டினையே !
அரசியலில் நீ அமைத்தாய் புதிய சாசனம் ,
எதிர் கட்சிக்கும் நீ கொடுத்தாய் அமைச்சர்
ஆசனம் .
என்னே ! உன் அரசியல் சிந்தை ! இன்று
அரசியல் ஆனது ஊழல் சந்தை .
தொழிற்சாலைகள் தொடங்கி வைத்தாய் ,
நீர்பாசனம் அமைத்து வைத்தாய் ,விவசாயம் விருதித்தாய் , பள்ளிகள் பல நடத்தி வந்தாய் ,
ஒன்றா இரண்டா எதைத்தான் நான் கூற ?
கல்விக்கோ உயிர் தந்தாய் , - கற்பவர்
பசிக்கோ உணவு தந்தாய் . - கல்வியும்,
தொழிலும் தழைத்தது உன் திறத்தாலே,
இன்று கல்வியே வியாபாரம் ஆனதே
அதர்மத்தாலே !
கல்வி வரம் தந்த கற்பகத் தருவே !
நேர்மைக்கும், எளிமைக்கும், நீதான் உருவே!விடுதலைக்கு உழைதிட்டக் கதிரோனே !
நீ இருக்கும் வரை இருந்ததில்லை
இருள்தானே !
நல்லாட்சி எப்போது மலர்ந்திடுமோ?
மறுமலர்ச்சி இனியேனும் பிறந்திடுமோ ?
உனைப்போல் ஒருவன் இனி இல்லை,
நீ ஏன் மீன்டும் பிறக்கவில்லை ?...