ஒரு பழம் போதுமா

ஒரு பழம் போதுமா?
இன்றொரு பழம் போதுமா? – இல்லை

இன்னொரு பழம் வேண்டுமா
மூன்று வேளையும் பழம் வேண்டுமா – ஐயா (ஒரு)

எப்பொழுதும் நீங்கள் குறைந்தது
இரண்டு பழங்கள் சாப்பிடுவீர்களே! - ஐயா (ஒரு)

மதுரை சென்று ஊர் திரும்பும்போது
காலேஜ் ஹவுஸ் தாண்டும்போது...ஆ..ஆ.

தள்ளுவண்டியில் பழங்களைப்
பார்த்துச் செல்லும்போது...ஆ..ஆ.

’என்னைப் பார்த்தும், என் திரட்சியைப் பார்த்தும்
சாப்பிடாமல் போகிறீர்களே, ஐயா ...ஆ..ஆ.

இனிப்பான நாட்டுப்பழம் வேண்டுமா
பசுமையான செவ்வாழை வேண்டுமா .ஆ..ஆ

கனிவான கற்பூரவல்லியும் நானன்றோ
சுவையான சிறுமலை வாழையும் நானன்றோ!...ஆ..ஆ

ஆளுக்கு இரண்டு பழங்கள்
சாப்பிட்டுச் செல்லுங்களேன்...

ஒரு பழம் போதுமா?
இன்னொரு பழம் வேண்டுமா – ஐயா (ஒரு)

கவிக்குறிப்பு:

என் அப்பா பல வருடங்களுக்கு முன், கிட்டத்தட்ட தினமும் எங்களூரிலிருந்து (சோழவந்தான்) மதுரைக்குச் சென்று கடைசிப் புகைவண்டியில் ஊர் திரும்புவார்கள்.

தினமும் காலேஜ் ஹவுஸ் லாட்ஜ் தாண்டும்போது நண்பர்களுடன் தள்ளுவண்டியில் விற்கப்படும் வாழைப்பழங்கள் சாப்பிடுவது வழக்கம்.

சில நாட்களில் சாப்பிடாமல் தாண்டிச் சென்றால், உடன் செல்லும் நண்பர் சொல்வாராம், ‘அங்கே பார், கன்னியப்பா, பழங்கள் நம்மை நோக்கி ஏக்கத்துடன் பார்க்கின்றன. சாப்பிடச் சொல்லி அழைக்கின்றன. வாங்கித்தா’ என்பாராம்.

அதையே ‘ஒரு நாள் போதுமா’ பாணியில் முயற்சித்திருக்கிறேன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Apr-16, 11:08 am)
Tanglish : oru pazham POTHUMA
பார்வை : 260

மேலே