நிழலின் வெற்றிடம்

நீ சிகரெட்டை புகைக்கும் போதும்
இயற்கை சீற்றம் கொள்ளும்போதும்
நான் உன்னை தான் உற்றுபார்க்கிறேன் !!
உன் நிழலை சுற்றி இருக்கும் வெற்றிடம்
என்னை தான் குறிக்கும்
அதை நீ அறியாய், அனால் நான் உன்னை அறிவேன்...!!
நீயோ என்னை எப்போதும் மறந்துவிடுகிறாய்
நானோ எப்பொழுதும் உன்னை கண்காணிக்கிறேன்
ஏனெனில் நானே இவ்வுலகில் நிரந்தரமானவன்...!!
என்னை கடவுளென்று நினைத்தாயோ??
இல்லை என் பெயர் மரணம்!!!