உதிர்ந்த சிறகுகள்

சொல்வதற்கு ஒன்றுமில்லை..
ஏனெனில் கேட்போர் யாருமில்லை..
சொல்வதற்கு சிறிது இருக்கிறது..
கேட்பதற்கு சிலர் இருந்தனர்..
சொல்வதற்கு நிறைய இருக்கிறது..
கேட்பதற்கு ஏராளமானோர் இருந்தனர்..
இப்போது புரிகிறது,
சொல்வதும்,கேட்பதும்
வேறுவேறு இல்லையென்று..!!

* * *

விடைகளை தேடுவது ஒரு வழி..!
வினாக்களை மாற்றுவது ஒரு வழி..!

* * *

இறப்பை சுமந்தால் ,சாவு..
இரைப்பை சுமந்தால் ,வாழ்வு..
இவ்வளவுதான் வித்தியாசம்..!!

* * *

கிழக்கையும்,மேற்கையும்
படைத்த
சூரியனை,
சூரியன் கிழக்கில் உதிக்கிறான் என்றும்
சூரியன் மேற்கில் மறைகிறான் என்றும்
திரித்து வைத்ததில்
தொடங்கியது,
மனித அரசியல்..!!

* * *

தானியங்கி கதவுகளின்
கண்டுபிடிப்பும்கூட
வேசியினை கண்டதால்தான்
நிகழ்ந்திருக்கும்..
சற்று வரலாற்றில் தேடி பாருங்கள்..!!

எழுதியவர் : கல்கிஷ் (26-Dec-16, 9:53 pm)
Tanglish : uthirntha siragukal
பார்வை : 101

மேலே