ந ம கி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ந ம கி |
இடம் | : கடலூர் |
பிறந்த தேதி | : 17-Feb-1978 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 834 |
புள்ளி | : 146 |
தமினாய்.....
வாழ்வதும்,தமிழனாய் விழ்வதும் தவிர வேறுபெறுமைஅல்ல எனக்கு...
பிரம்பு சுமந்த பிரம்மாக்களே! - எங்கள்
குறும்பு பொறுத்த குருமார்களே!
துரும்பையும் தூணாக்கும் துரோணர்களே!
துதிக்கிறோம் உங்களை இந்நாளிலே!
மாணவ மாலுமிகள் எங்களுக்காக
கரும்பலகையை கலங்கரை விளக்கமாக்கினீர்கள்!
சுண்ணக் கோல் கொண்டு
எங்கள் சூனிய அறிவிலும்
சுடரேற்றினீர்கள்!
காட்டாற்றில் எமை
கரை சேர்த்த தெப்பங்கள் நீங்கள்!
உங்கள் உளி பட்டதால்
உயிர்பெற்ற சிற்பங்கள் நாங்கள்!
அறிவியலையும் ஆங்கிலத்தையும்
அறிமுகம் செய்ததும் நீங்கள்தான்!
அறியாமையை எங்களிடமிருந்து
பறிமுதல் செய்ததும் நீங்கள்தான்!
இயற்பியலும் இலக்கணமும்
இலகுவானது உங்களால்தான்!
கசப்பான கணிதம் கூட
கற்கண்டானது உங்களால்த
ஆட்கொண்டு அருள்புரிய வருவாய் கண்ணா...!
காடெல்லாம் அலைந்து ஆவினங்கள் மேய்த்து
ஓடாகத் தேய்ந்து பெண்டீர் பாலைக் கடைந்து
எட்டாது உறியில் வெண்ணையை வைத்தால்
தட்டாது பதுங்கி அதை திருடி உண்டாய்
அன்று ஆடிப்பாடி உனைப் புகழ்ந்தார் ஆயர்குலத்தார்
இன்று கூட்டாக பிடித்து உனைக் காவலில் வைப்பார்....
யமுனையிலே நீராடும் கோபியர் ஆடையை
அபகரித்து அறியாமல் மறைத்து வைத்தாய்
வேணுகானக் குழலாலே இளம்பெண்களை மயக்கி
கூடிக் குலாவிட மாயம்பிம்பம் கொண்டாய்
அன்றதை லீலையென்று பாகவதம் சொல்லும்
இன்று செய்தால் சட்டம் உனை உள்ளே தள்ளும்
பிருந்தாவன ராதையிடம் காதல் விளையாடி
ருக்மணிக்கு முதல்முதலாய் மாலையிட்டாய்
காதல் நடைபாதை......
வியாபரமாகிவிட்டது.....
தெருவெல்லாம்.....
காதல் ஜோடிகள்.....!
உற்றுப்பார்தால்......
கண் எரியும்.....
உன்னை உற்றுபார்தேன்......
காதலில் எரிகிறேன்.....!
பிறக்கும் போதும்....
இறக்கும் போதும்....
வலி தருவது......
காதலே.................!
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
மாலை நெருங்கி விட்டது
தந்தையைத் தேடினான்
மதுக்கடைச் சாலையில் ...
1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது.
2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை.
3. ஊருக்கு வெளியில் பெரிய பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர்.
4. மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.
5. பட்டப் படிப்புகள் நிறைய. பொது அறிவும் உலக அறிவும் மிகக் குறைவு.
6. கை நிறைய சம்பளம். வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை.
7. புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான விவாதங்கள் அதிகம். உணர்வுப் பூர்வமா
1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது.
2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை.
3. ஊருக்கு வெளியில் பெரிய பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர்.
4. மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.
5. பட்டப் படிப்புகள் நிறைய. பொது அறிவும் உலக அறிவும் மிகக் குறைவு.
6. கை நிறைய சம்பளம். வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை.
7. புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான விவாதங்கள் அதிகம். உணர்வுப் பூர்வமா
நித்தம் எமக்கு போராட்டம்
நீலக்கடலோ நிற மாற்றம்
ரத்தம் சிந்தும் வாழ்வோட்டம்
செங்கடலாகும் பரிமாற்றம்...
உண்டுபிழைக்க உயிர்வாழ
ஆழக்கடலே ஆதாரம்
அதற்கும் அனுமதி தாராமல்
தடுக்கும் சிங்கள பரிவாரம்...
தமிழனின் அனுமதியில்லாமல்
கச்சத்தீவு தானமடா
பிச்சையிட்டக் கைகளையே
உடைப்பதுயென்ன நியாயமாடா...
உப்புக்கண்ணீர் கடலாக
சுரக்குது எங்கள் கண்களிலே
அதுதான் பாலோ என்றெண்ணி
பருகுது பசியில் குழந்தைகளே...
எத்தனை ஆட்சிகள் வந்தாலும்
எங்களுக்கில்லை வாழ்வுரிமை
எத்தனைத் தலைகள் வந்தாலும்
எங்களுக்கில்லைக் கடல் தலைமை...
தினம் தினம் செத்துப் பிழைப்பதற்கு
வேதனைத் தீயில் எறிவதற்கு
சொல்வது சுலபம் , செய்வது , கடினம் .
சினிமாக்காரர்களை கூத்தாடிகள் என்று க்சொன்னல் தவறா
அவள்...
எழுதுகோளை எடுத்தாலே !
உற்சாகமாகி விடுகின்றார்
பிள்ளையார் .
அவள் ...
வாசல் தெளித்து கோலம்போட வந்தாலே !
விழாவாகிவிடுகின்றது
வீதி .
அவள் ...
காலணி அணிந்தாலே !
வருத்தப்படத் தொடங்கிவிடுகின்றது
பூமி .
அவள் ...
கை கடிகாரம் கட்டாத நாளே !
தீபாவளி கொண்டாடும்
மணிக்கூண்டு
அவள் ...
வீட்டுக்குள் சென்றாலே !
மங்கலாகி விடுகின்றது
சூரியன் .
அவள்...
உறக்கத்தில் இருந்தாலே !
கலராகிவிடுகின்றது
கனவு .
அவள்...
வந்துப் போகும் இடமெல்லாம்
வசந்தமாகிவிடுகின்றது
வருடம் முழுதும் .
அவள்...
வசிக்கின்ற ஊரினிலே !
தரிசாக ......
நான் மட்டும் .