அவள்
அவள்...
எழுதுகோளை எடுத்தாலே !
உற்சாகமாகி விடுகின்றார்
பிள்ளையார் .
அவள் ...
வாசல் தெளித்து கோலம்போட வந்தாலே !
விழாவாகிவிடுகின்றது
வீதி .
அவள் ...
காலணி அணிந்தாலே !
வருத்தப்படத் தொடங்கிவிடுகின்றது
பூமி .
அவள் ...
கை கடிகாரம் கட்டாத நாளே !
தீபாவளி கொண்டாடும்
மணிக்கூண்டு
அவள் ...
வீட்டுக்குள் சென்றாலே !
மங்கலாகி விடுகின்றது
சூரியன் .
அவள்...
உறக்கத்தில் இருந்தாலே !
கலராகிவிடுகின்றது
கனவு .
அவள்...
வந்துப் போகும் இடமெல்லாம்
வசந்தமாகிவிடுகின்றது
வருடம் முழுதும் .
அவள்...
வசிக்கின்ற ஊரினிலே !
தரிசாக ......
நான் மட்டும் .