மணவாழ்க்கை
திருப்தி வேண்டும்
திருமணத்தில்
மணம் வேண்டும்
மணவாழ்வில்...
கை சூடுபடுவதில்
சுகமானது
தினம் சுடும் தோசைகள்
நாசமானது...
சிதறிய பூக்கள்
மாலையானது
மாலையின்று மகத்துவமாய்
மரியாதையானது...
துவைத்த ஆடைகள்
கிழிந்தது
சொன்ன பொய்கள்
வழக்கானது
இரட்டை காதல்
ஒன்றானது
இம்சை அன்பு
ஆயுதமானது...
முதல்பார்வை முற்றிலும்
குறைந்தது
முழுபார்வை மனதால்
நிறைந்தது...
வெட்டிப் பேச்சு
வேதாந்தாமாய் சேர
மொக்கை பேச்சு
அகராதி ஆனது...
செல்ல வார்த்தைகள்
கொடி போல் பரவ
கோடி போதாது
அதை நீங்கள் நிறுத்த...
ஒரு வருடம்
வாரமாய் கழிந்தது
மீதி வருடம்
வரங்களாய் அமையும்...
சாதரண வாழ்த்தும்
வாழவைக்கும் என்றால்
சாதாரணமாகவே சொல்கிறேன்
மணவாழ்க்கை வாழ்த்துக்கள் மக்களே!