என்னை எனக்கே பிடிக்கவில்லை
![](https://eluthu.com/images/loading.gif)
என்னை பிடிக்கவில்லை
எனக்கே என்னை பிடிக்கவில்லை
பரிதாபம் பல கண்டும்
பச்சாதாபம் கொள்ளாமல்
பார்த்தும் பாராமல் இருக்கும்
என்னை பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!
ஊரிலே பெரியவனாம் - நான்
உயர்ந்தவனாம் - இருந்தும்
சீர் கேடுகள் பல நடந்தும்
சிறப்புக்கள் பல இழந்தும்
கண்டும் காணதவனாய்
கலங்கம் அற்றும் அற்றவனாய்
இருக்கும் எனைக்காண
பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!
மன சாட்சி கொன்றவனாய்
மனித நேயம் அற்றவனாய்
நடக்கும் பல கொடுமைகளை
நீதம் பேசும் உணர்வுகளை
என் வாழ்வுக்காய் அஞ்சி
சுய நலம் கொண்டவனாய்
இருக்கும் என்னிலை காண
பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!
முள்ளந் தண்டோடு வயிரொட்ட
குழியுக்குள் கண்புதைய
வயிற்றுப் பசிக்காய் அலையும்
ஏழை முகம் கண்டும்
இரந்து பல கேட்டும்
முகம் கோணி திருப்பி செல்லும்
என்னிலை காண
பிடிக்க வில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!
பேருக்காய் சில பணிகள்
புகழ்பாடும் கனிமொழிகள்
வீணுக்காய் அகமகிழ்ந்து
வீழ்ந்தாரை மேல் மித்தித்து
அவர் வருந்த எனை உயத்தும்
நிலை காண
பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!
எனை உயர்த்த பிரிவினைகள்
இவருக்குள் விசம் விதைத்து
அவர் துயரில் சுகம் கண்டு
என் வாழ்வை பலனாக்கி
அவர் வாழ்வை பழுதாக்கி
வாழும் என்னிலை காண
பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!