நாளைய பிணங்கள்
பூனை தன் பாதங்கள்
எழுப்பிய சப்தங்களை தரையை நாவால் நக்கி
சிறையிட்ட ஒருபொழுதில்,
அதிகாரமாய் அன்பு செய்தவர்களும்,
அகங்காரமாய் அன்பு செய்தவர்களும்,
ஆர்ப்பாட்டமாய் அன்பு செய்தவர்களும்,
அவசரமாய் அன்பு செய்தவர்களும்,
துயிலுருகின்றனர்..
சற்று நேரத்தில் வெய்யிலில்
பிறப்பெடுக்க காத்திருக்கும்
நிழல்கள் அவர்களில்
கருவுற்றுறிருந்தன ..!!
சில நூறு ரத்த துளிகளை,
சில நூறு கண்ணீர் துளிகளை,
சில நூறு உயிர்வித்துகளை
சேகரித்தபடி நகருகிறது இவ்விரவு..!!
உறக்கம் கலைந்து
உயிர்த்தெழுந்த பொழுதொன்றில்
மௌனம் சுமந்த காற்று
ரகசியமொன்றை காதருகே கூறி சென்றது..
தெருவில் முப்பத்தியேழு யோனிகள்
இரவில் திறந்திருந்ததென..!!