வாழ்க்கை சுமை

இன்பமோ துன்பமோ இரண்டும் கலந்தது
வாழ்க்கை... துன்பத்தை சுமக்க மனதுக்கு
வலிமை இல்லையே... இன்பமோ நிரந்தரம்
இல்லையே...
கடவுளே கதியே என்றிருக்கும்
உன் அடியேனை களிமண்
பொம்மை போல்
விளையாடுகிறாயே...
வலிகளை சுமக்க எனக்கு
வலிமை போதாது...
எதிர்பார்த்த வாழ்வு திசை
மாறும் சூச்சமம்
என்னவோ...
வாழ்வில் எது சரி எது
தவறு என்று போதிக்க
பேரிடியை வாழ்வில்
புகுத்த வேண்டாமே...
நீ கொடுத்த வாழ்க்கைக்கு
நீயே தடையாய் வருவது
சரிதானா... முதல் கோணல்
முற்றிலும் கோணல்
என்பது சரிதானா...
வழி தவறிய வாழ்க்கை
பாதையை சரி செய்ய
இயலாதோ...
இயலாமையே நான்
துன்பமாய் கருதுகிறேன்...
வழி சொல் அழைக்கிறேன்...