பச்சை புல்வெளி ---முஹம்மத் ஸர்பான்

தென்றலிலே தலை ஆட்டும் நிலமகளே!
சிட்டுக் குருவி காதல் கொண்டதோ உன் மேலே
உன்னை போல் பச்சைக்கிளிகள் காண்கின்றேன்
காட்டுக்குயில்கள் கூட்டுற்குள் நானும் ஒளிகின்றேன்.

அதிகாலை கனவில் பெண்ணும்
உன்னோடு உறக்கம் கொள்கிறாள்.
பனி பொழிவும் வித்தகக் கலைஞன்
தூக்கணாங்குருவி கூட்டுக்குள் வண்ணம் பூசுகிறது.

இரவு வந்தால் நிலவின் வெளிச்சம்
கதிரவன் மலர்ந்தால் நிழலின் வெளிச்சம்
பூக்கள் பூத்தால் இலையின் வெளிச்சம்
வானம் உடைந்தால் விண்மீன் வெளிச்சம்

மழலை போல் அல்லும் பகலும் ஆனந்தம்
அழகாய் தேடும் காட்சி எல்லாம் உனக்காக
செந்தமிழும் கவி பாட உன்னை நாடிடுவான்
கதிராடும் சாட்சியும் பெண்ணின் இடை என்பான்.

பிரான்ஸ் நாட்டு பூக்களெல்லாம் ஒரு வகை
தமிழ் நாட்டு பூக்கள் உதிர்ந்தும் கூந்தலில் வாழ்ந்திடும்
காற்றில்லா தேசம் அது விண்வெளி
காற்றுக்கு சேலை கட்டுது பச்சை புல்வெளி

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (28-Jan-16, 10:48 am)
பார்வை : 356

மேலே