முற்றுமுடுகு வெண்பா

இந்தநா ளன்றுபோ லின்பமே தந்ததோ
பந்தபா சங்களே பஞ்சமோ? - சொந்தமே
வெண்ணிலா முந்தியே விண்ணிலே கொஞ்சுதே
வண்ணமா யங்களோ மஞ்சு .

இந்தநா ளன்றுபோ லின்பமே தந்ததோ
பந்தபா சங்களே பஞ்சமோ? - சொந்தமோ
நஞ்சுபோ லெண்ணுதே நன்றியே யின்றியே
வஞ்சமோ நெஞ்சிலே வம்பு.
.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Jan-16, 11:33 am)
பார்வை : 112

மேலே