இயற்கை

கன நேரத்தில்
கண்டுகொண்டேன்
உன் சாயல்
அனைத்திலும்
பூத்து கொண்டு
செல்கிறது
எனது மனம்
என்னும் காற்றாலை
பரவிக்கிடக்கும் மண் தரையின் மேலே
படர்ந்து கிடக்கிறது
நீல வெள்ளை
நீரோடையாய்
அலைகள்
மன பாரம் சுமந்த மனிதர்களுக்கு
உன்னால் மட்டுமே
வைத்தியம் செய்ய முடிகிறது
வண்ண வண்ண நிறங்களாய்
வாசனை கொண்டு சென்றாய்
எங்கிருந்து எடுத்து கொண்டாய்
இத்தனை நிறங்களையும்
உனக்கு நான் கொடுத்தது எல்லாம்
வெறும் கல் நிறைந்த மண்ணும்
சிறிதளவு தண்ணீரும் தானே
ஒளியை நீயே எடுத்துகொண்டாயே
உன் நன்பனிடம் இருந்து
என் வீட்டையே ரோஜாவனம் ஆக்கிவிட்டாயே
உன் வன்னங்களினால்
என் குடிசை வீடும் மாளிகை ஆனது
பசி என்று யாரவது
உன்னிடம் வந்துவிட்டால்
நீயே உணவாக மாரிவிடுகிறாய்
அன்னமாகவும்,காய்கரிகளாகவும் ,
பழங்களாகவும், தானியமாகவும்
மண்ணை பிளந்துகொண்டு
வாரி இறைக்கிறாய்
நன்றி அறிவில்ல மனிதர்கள்
உன்னை அழித்துக்கொண்டு
கட்டிடமாக மாற்றினாளும்கூட
இன்றும் அவன் பசி
போக்கிகொன்டுதான் இருக்கிறாய்.
இயற்கையே
உன்னை அழிக்கும் ஒவ்வொரு நொடியும்
அவன் அவன் அழிந்து கொண்டுதான் இருக்கிறான்.
நீ அழிக்கப்பட்டாலும் மீண்டும்
முளைத்து கொண்டுதான் வருகிறாய்

எழுதியவர் : கஸ்தூரி (28-Jan-16, 12:06 pm)
Tanglish : iyarkai
பார்வை : 602

மேலே