அன்று தொல்காப்பியம் சொன்ன ஊழிகாலம் - நிஷாந்த்

கைபிடி சாம்பலாய் போக போகும்
இந்த உடலுக்கு தான் எத்தனை தேவைகள்
உயிரென்று ஒன்று ஒடிக்கொண்டு இருக்கும் வரையில்
ஆடலாம் ஆணவ ஆட்டம்
கருணையிழந்து மற்றவர்
வலி மறந்து
சுயநலம் கொண்டு
வாழ்வளித்த இயற்கையும் சுரண்டி
மண்ணில் எந்த உயிரினமும் வாழயியலாத வண்ணம்
பொன் பூமியை சூறையாடி
வேதியல் நஞ்சுகளை மண்ணில் விதைத்து
விஷத்தை அறுவடைத்து
வாய் இனிக்க அழுக்கை ருசித்து
குடிநீரை கூவநீராக்கி
கூவநீரை வடிக்கட்டுவதாக
மேலும் வேதியல் வினைகளை விதித்து
விதியை விரைவில் காணதுடிக்கும் அரக்க இனமே
உன்னை விதைத்த பாவத்துக்கே உலகம் சாம்பலாகிறது ...

எழுதியவர் : கவி தமிழ் Nishanth (28-Jan-16, 6:07 pm)
Tanglish : saampal
பார்வை : 206

சிறந்த கவிதைகள்

மேலே