இது என்ன நிலையோ……
வான்நிலவு வாடிப்போகுதே - அவள்
கண்கள் கண்டு தாழ்ந்து போகுதே
மேகப்போர்வை பின்னால் ஒளிந்து
வேகமாக போர்த்திக்கொள்ளுதே
வானில் தன்னை அழித்துவிட்டு
மீண்டும் புதிதாய் வரைந்துகொண்டு
பௌர்ணமியில் போட்டிக்கு அழைக்குதே....
கலங்கி போவாய் வெள்ளி நிலவே
களங்கம் இல்லா அவள் கண்கள் கண்டே..
கலப்பை கண்ணால் நெஞ்சை உழுது
காதல் விவசாயம் செய்பவள் அவளே
ஆண் இருவர் நிலவு சென்றார்
மணல் மட்டும் கொண்டு வந்தார்
பெண்ணிவளும் சென்றிருந்தால்
பூக்களுடன் வந்திருப்பாள்
வான் நிலவில் கூட – பிராண
வாயு கொடுத்திருப்பாள்
காட்சியிலே பிழை கொண்டேன்
கற்பனையில் வாழக்கண்டென்
காணுகின்ற காட்சிகளின்
அர்த்தங்கள் மாறக்கண்டேன்....
இது என்ன நிலையோ…….